கல்வி என்னும்
கற்கண்டை – நீ
கசடறக் கற்றால்
–வாழ்வில்
வளம் வந்து சேர்வது
உண்மையப்பா!
ஏட்டுக் கல்வியுடன்
நின்றிராமல்
எதிர் நீச்சல்
போடும்
வாழ்க்கைக் கல்வியும்
மேற்கொண்டால்-உன்
வாழ்வு வண்ணச்சிறகடித்துப்
பறப்பது உண்மையப்பா!
கண்டதைப் படிக்கப்
பண்டிதன் ஆவான் – நீ
பற்பல நூல்களைத்
தெரிந்துக் கற்றால்- உன்
வாழ்வு இடர்ப்படாது
என்பது உண்மையப்பா!
தாம் பெற்றக் கல்வியை
தாம் மட்டும்
அனுபவிப்போம் என்றிராமல்
– நீ
தரணி எங்கும் பரப்ப
வழிவகை செய்தால்- உன்
வாழ்வு தளரா நடைபோடும்
நனி உண்மையப்பா!
நல் எண்ணங்களுடன்
நாமகளின் கல்வியைக் கற்றறிந்தால்
வறுமையும் வந்து
வாட்டுமோ உன் வாழ்நாளில்?
கல்வி என்னும்
பயிரை கனிவுடனே நீ கற்றால்
கனத்த இதயமும்
கனியுமே வாழ்நாளில்!
கல்வி எனும் அருங்கடலைக் கடக்க நீ முற்பட்டால்-
வாழ்வில் கரடு
முரடான பாதைகளும் பரிதவித்துப் போகுமடா!
இன்முகத்துடன்
விரும்பிக் கற்றால்
எத்துளியிலும்
எண்ணங்கள்
எதார்த்தம் என்பது
உண்மையப்பா
இக்கல்வி-----------
ஈன்றவளை இன்வயப்படுத்தும்
கல்வி
கேளிர் பலர் போற்றும்
கல்வி
கலைமகள் உறையுமிடம்
கல்வி
கல்லாதானைக் கல்வி
புகட்ட வருவதும் கல்வி
கற்றவன் வரம்பு
மீறி போகாதிருக்கக்
கற்றுத்தருவதும்
கல்வி
எழுத்தறிவித்த
இறைவனிடம் இருப்பதும் கல்வி
ஆங்கோர் ஓர் ஏழையிடம்
இருப்பதும் கல்வி
தேமதுரத் தமிழில்
உலவுவதும் கல்வி
கல்வி என்ற விசாலக்
கல்வியை
நாளும் படி நனி விரும்பிப் படி
படிப்படியாய் புகழ்
வந்து சேரும் உன் வாழ்நாளில்!!!!!!!!!!!!
No comments:
Post a Comment