
கவிதைப் பேழை
தலைப்பு :
காசிக்காண்டம்
பொருண்மை : பண்பாடு
நூற்குறிப்பு
•காசி நகரத்தின் பெருமையைக் கூறும் நூல்.
•பாடுபொருள்: துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள்.
•பகுதி: “இல்லொழுக்கங் கூறிய”
•நமக்குப் பாடப்பகுதியாக வந்தது: பதினேழாவது பாடல்.
ஆசிரியர் குறிப்பு
•அதிவீர்ராம பாண்டியர்
•முத்துக்குளிக்கும் கொற்கையின் அரசர்.
•இவரின் மற்றொரு நூல்: வெற்றி வேற்கை அல்லது நறுந்தொகை.
•பட்டப்பெயர்: சீவலமாறன்.
•இயற்றிய நூல்கள்: நைடதம்,லிங்கபுராணம்,வாயு சம்கிதை,திருக்கருவை அந்தாதி,கூர்மபுராணம்
பாடல்
•விருந்தினனாக ஒருவன் வந்து
எதிரின்
வியத்தல் நன்மொழி இனிது
உரைத்தல்
திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்
எழுதல் முன் மகிழ்வன செப்பல்
•பொருந்து மற்றுஅவன் தன்அருகுற
இருத்தல்
போமெனில் பின் செல்வதாதல்
பரிந்துநன் முகமன் வழங்கல்
இவ்வொன்பான்
ஒழுக்கமும் வழிபடும் பண்பே.
விருந்தினராக ஒருவர் வந்தால்,
•வியந்து உரைத்தல்
•
நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல்.
•முகமலர்ச்சியுடன் அவரை நோக்குதல்.
•வீட்டிற்குள் வருக என வரவேற்றல்
•மனம் மகிழும்படி பேசுதல்
•அருகிலேயே அமர்ந்து கொள்ளுதல்
•விடை பெறும்போது வாயில் வரை தொடர்ந்து செல்லுதல்
•முகமன் கூறி வழியனுப்புதல்
•இந்த ஒன்பதும் விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கமாகும்.
Spr katturai
ReplyDelete