Search This Blog

Sunday, May 24, 2020

ஆள்வினையுடைமை

ஆள்வினையுடைமை

அருமை உடைத்தென்று
                                           அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
விளக்கம்:
  நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.
தாளாண்மை என்னும்
                        தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு.
விளக்கம்:
முயற்சி எனப்படும் உயர்ந்த குணத்தில்தான் பிறர்க்கு உதவுதல் என்னும் மேன்மை, நிலைபெற்றிருக்கிறது.

முயற்சி திருவினை ஆக்கும்
                                                   முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
விளக்கம்:
முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்; முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும்.
பொறியின்மை யார்க்கும்  

                                  பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.
விளக்கம்:
        உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை.
நன்றி இல் செல்வம்
கொடுப்பதூஉம், துய்ப்பதூஉம்
                          இல்லார்க்(கு), அடுக்கிய
கோடிஉண் டாயினும் இல்.
• விளக்கம்:
கோடி கோடியாக இருந்தாலும்,
கொடாதான் நுகராதான், ஏழைதான்.
நச்சப் படாதவன் செல்வம்,
                                                     நடுஊருள்
நச்சு மரம்பழுத்(து) அற்று.
• விளக்கம்:
கருமியின் விரும்பப்படாச் செல்வம்,
நடுஊரில் பழுத்த நஞ்சுமரம்.
     ஊழையும் உப்பக்கம் காண்பர்    
                                                    உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.
விளக்கம்:
ஊழ் என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள். சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வார்கள்.


No comments:

Post a Comment

Translate