Search This Blog

Saturday, May 16, 2020

நீதி வெண்பா , திருக்குறள் விளக்கம்

இயல் - 5

     நீதி வெண்பா
கவிதைப்பேழை
பொருண்மை : கல்வி
ஆசிரியர் குறிப்பு
கா.ப.செய்குதம்பிப் பாவலர்
காலம்: 1874 – 1950
கலை : சதாவதானம்
மாவட்டம்: கன்னியாகுமரி
ஊர்: இடலாக்குடி
சிறப்பு: 15 வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர்

சீறாப்புராணத்திற்கு உரை எழுதியவர்
சதம் - நூறு
சதாவதாணி:
1907 மார்ச் 10 ஆம் தேதி
இடம்: விக்டோரியா அரங்கம்
நூறு செய்யுளை ஒரே  நேரத்தில் பாடிக்காட்டுதல்

இடலாக்குடியில் மணிமண்டபம், பள்ளி உள்ளன.
நூல்கள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
                           பாடல்
அருளைப்பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை
அருத்துவதும் ஆவிக்கு  அருந்துணையாய் இன்பம்
பொருத்துவதும் கல்வியென்றே போற்று
                        விளக்கம்
           கல்வியானது,
1.அருளினைப் பெருக்குகிறது.
2.அறிவைச் சீராக்குகிறது
3.மயக்கம் அகற்றுகிறது.
4.அறிவுக்குத் தெளிவு தருகிறது
5.உயிருக்கு அரிய துணையாய் இருக்கிறது.
6.கல்வியைப் போற்றுக.

______________________________________________________________________________
                              ஒழுக்கமுடைமை

ஒழுக்கம் விழுப்பம் தரலான ஒழுக்கம்
 உயிரினும் ஓம்பப் படும்.   
      குறள் விளக்கம்:
ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால்,
அவ்வொழுக்கத்தை உயிரினும் மேலானதாக எண்ணிக் காத்தல்
வேண்டும்.
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை  இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.

குறள் விளக்கம்:
ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து
தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்று
 கல்லார் அறிவிலா தார்.
குறள் விளக்கம்:
அறிவு ஒழுக்கங்களால் சிறந்தவர்களோடு ஒத்து நடத்தல் வேண்டும்;
அப்படி நடக்காதவர் பல நூல்களைக் கற்றிருந்த போதிலும்
அறிவில்லாதவரே ஆவர்.
                                  மெய் உணர்தல்
எப்பொருள்எத்தன்மைத்து ஆயினும்                                                 அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
குறள் விளக்கம்:
எந்த பொருளும் எந்த தன்மையோடு தோன்றினாலும், மயங்காமல், அந்த 
பொருளின் உண்மையான இயல்பைத் தெளிவாக காண்பதே அறிவாகும்.
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் 
  நாமம் கெடக்கெடும் நோய். 
குறள் விளக்கம்:
காமம், வெகுளி, மயக்கம் என்னும் இவை
மூன்றின் பெயர்களைக்கூட

                பெரியாரைத் துணைக்கோடல்
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
குறள் விளக்கம்:
பெரியோரை விரும்பித் தமக்குரிய சுற்றத்தினராகப் பெற்றுக்கொள்ளுதல்,
பெறுதற்கரிய பேறுகளுள் எல்லாம் அரிதான பெறும்பேறு ஆகும்.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் 
 கெடுப்பார் இலானும் கெடும். 
குறள் விளக்கம்:
இடித்துச் சொல்லி திருத்துபவர் இல்லாத பாதுகாப்பற்ற மன்னன்,
தன்னைக் கெடுப்பவர் எவரும் இல்லாதபோதும், தானாகவே கெடுவான்.
பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத
நல்லார் தொடர்கை விடல். 
குறள் விளக்கம்:
பலரோடும் பகைத்துக் கொள்வதைவிட, நல்லோருடன் கொண்ட தொடர்பைக் கைவிட்டு விடுதல், அதனினும் பதின்மடங்கு தீமை தருவதாகும்





No comments:

Post a Comment

Translate