மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக்
கையாற் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல் போற்
செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.
வண்டுகள் மொய்க்கின்ற குளத்தில் கைகளால் குடைந்து நீராடும்பொழுது உன் திருவடிகளைப் பாடி, வழிமுறையாக வந்த அடியவர்களாகிய நாங்கள் வாழ்வுபெற்றோம். ஐயனே ! ஆர்க்கின்ற நெருப்பு போன்று சிவந்தவனே ! திருநீறு பூசும் செல்வனே ! சிறிய இடையையும், மை நிறைந்த அகன்ற கண்களையும் உடைய உமையின் மணவாளனே ! ஐயா, நீ ஆட்கொண்டருளும் திருவிளையாடலில் உய்யும் அடியார்கள் உய்யும் வகையில் நாங்களும் உய்ந்துவிட்டோம் ! நாங்கள் தளர்வுறாமல் காப்பாயாக !
மொய் - மொய்க்கின்ற வண்டு; தடம் - நீர்நிலை; பொய்கை - குளம்; அழல் - தீ; மருங்குல் - இடை; எய்த்தல் - இளைத்தல்.
a
No comments:
Post a Comment