பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவர் ஆவர் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.
பழமையான பொருட்களுக்கெல்லாம் பழமையான முதல்வனே ! இப்போது தோன்றிய புதுமையானவற்றுக்கும் புதுமையானவனே ! உன்னைப் பிரானகப் பெற்ற உன்னுடைய நேர்த்தியான அடியாரான நாங்கள், உன்னுடைய அடியவர்களை வணங்குவோம்; அவர்களுக்கே நண்பர்களாவோம்; அத்தகையவரையே நாங்கள் மணம் செய்துகொள்வோம்; அத்தகையோர் சொல்லும் வகைப்படியே அவர்க்கு அடியவர்களாய்ப் பணி செய்வோம். இவ்வாறே எங்களுக்கு எம்பிரான் அருள் செய்தால் எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை !
பேர்த்தும் - புதுமையான; பாங்கு - நட்பு; பரிசு - முறை; தொழும்பு - அடிமை
No comments:
Post a Comment