Search This Blog

Monday, November 23, 2015

கலாம் காண விழையும் கதா நாயகர்கள்- (2015-16)

கலாம் காண விழையும் கதா நாயகர்கள்- (2015-16)




கலாம் காண விழையும் கதாநாயகர்கள்
எனது பத்தாம் வகுப்பு மாணவர்கள் கலாமின் பிறந்த நாள் முன்னிட்டு எழுதிய கவிதைத் தொகுப்புகள்(2015-16)



  
நான் இருக்கும் இந்நாடு
முழுக்க முழுக்கப் பண்பாடு
இந்நாட்டிலுள்ள மாணவர்களே
நீங்கள்தான் எங்கள் கண்களே
வல்லரசு வல்லரசு என்றார் கலாம்
அதை நாம் இளைஞர்களால் அடையலாம்
கலாமின் இறப்பு நமக்கு சோகம்
அதனால் அது இளைஞர்களுக்குக் கொடுத்தது வேகம்
அப்துல்கலாமிற்குப் பிடித்தது பண்புள்ள பார்த்தா
இளைஞர்களுக்குப் பிடித்தது அவரின் கர்த்தா.
                                --கார்த்திக்(K.B.)


இளைஞர்களின் விடிவெள்ளி
நாளைய இந்தியர்களின் வழிகாட்டி
கலாமின் கனவில் இளைஞர்கள்
என்றும் அவரின் கதாநாயகர்கள்
இதோ உனக்காகத் தந்துள்ளார் சில துளிகள்
அரசு பள்ளியில் படித்து இந்தியாவின் குடிமகனானது
ஒரு தன்னம்பிக்கைப் பாடம்
பொக்ரானில் அவர் நடத்திய அணுகுண்டு சோதனை
நம்மாலும் சாதிக்க முடியும் என்ற போதனை
ஜனாதிபதியானாலும் தோற்றத்தில் எளிமை
பார்வையில் விஞ்ஞானம் – அதுவே
இளைஞர்களை ஈர்த்த வெகுமானம்
சொல்லால் மட்டுமே அவர் முன்னால் குடியரசுத் தலைவர்
செயலால் இளைஞர்கள் இதயத்தில் என்றும் அவர் ஆசிரியர்.
கலாமின் கதாநாயகர்களே நதிகள் இணையட்டும்
மின்சாரம் மலிவாகட்டும்
தகவல் தொடர்பு விரிவாகட்டும்
நவீன வசதிகள் எட்டுத்திக்கும் கிடைக்கட்டும்
தூங்காமல் செய்வதுதான் கனவு
அது பலமுறை வந்தால் நனவு.
                           ---- க.ரித்திகா


ஒரு நாள் கடவுள் கேட்டார்
உலகில் உயர்ந்தவர் யார்?
உரைகள் கொண்டு கவர்ந்தவர் யார்?
இந்த பெரும்புகழ் கொண்ட இந்தியாவைப் பார்!!
இத்தகைய வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தவர் யார்?
பாலினம் மாறாத குழந்தைகள் பூத்துக் குலுங்கும் தமிழ்நாட்டைப் பார்!
மழலை பொங்கும் சிறுவர்களை தன் வசம் இழுத்தவர் யார்?
என்றும் மாணவர்களை சிந்திக்க வைத்தவர் யார்?? - அவரே
குணமிக்க அறிவுச் செல்வங்களைக் காண விழைந்தவர்
பண்புமிக்க பள்ளிக்கூடம் அமைக்க விரும்பியவர்
நல்லெண்ணமிக்க ஆசிரியர் வர குரல் கொடுத்தவர்
என்றும் சமத்துவத்தைப் பயின்றவர்
இலஞ்சம் இல்லா இந்தியாவை உருவாக்கும் எண்ணம் உடையவர்.
தொழிற்கல்வியும், கலைக்கல்வியும் ஒன்றுசேர வளர உழைத்தவர்
மாணவர்களின் நலனையும் கல்வியையும் விரும்பியவர்
அஞ்சா நெஞ்சம் கொண்ட பந்தயக் குதிரைகளைக் காணத் துடித்தவர்.
என்றும் பெற்றோர் சொல் மதிக்கும் பிள்ளைகள் வேண்டுமென எண்ணியவர்
இந்தியாவின் புகழ் உயரப் பாடுபட்டவர்
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதை துணிந்து உரைத்தவர்.
புறநானூற்றின் பாடல் பாடி தமிழின் புகழை நிலை நாட்டியவர்
இவ்வாறு கனியன் பூங்குன்றனாரின் புகழை உலகமெங்கும் பரப்பியவர்.
ஏழைகளுக்காக ஆராய்ச்சி செய்து மகிழ்ந்தவர்
திருக்குறளே தம் வாழ்க்கை தர்மமாக வாழ்ந்தவர்
எம்மதமும் சம்மதம் என வகுத்துக் கொண்டவர்
மீண்டும் கடவுள் என்னிடம் கேட்டார் – இவர் யார் என்று சொல் பார்க்கலாம்????
கணம் யோசிக்காமல் கூறினேன் அப்துல் கலாம்
ஆனால், வேடிக்கை… ஆண்டவன் நினைத்தான்
சொல்லப்போவது தன் பெயர் என்று….
இதனால் ஏற்பட்டது தகராறு
நான் கூறினேன் கலாமின் வரலாறு
உண்மை உணர்ந்த நாயகன்
தலை வணங்கினான் ஏவுகனை நாயகன் முன்…….
                                ----- கீர்த்தி வாசன்.   



No comments:

Post a Comment

Translate