வாழ்த்து
மடல் – அருணா
வாழ்த்துரை வழங்க வாழ்ந்தோர்கள் தேவை. ஆனால் என் தேவதைக்கு
ஏன் இந்த ஆசை! என்னையழைத்து வரவேற்புரை வழங்கக் கட்டளையிட…….
கட்டளையிடுமளவிற்கு கல் நெஞ்சக்காரியா? என்றால் இல்லை… இல்லை….
கனியமுது! கண்ணனை கனவில் காவியமாக்கும் காதல்காரி.!!!
தனக்கு அமைந்த காதலனோடு கனவிலும் நினைவிலும் காதல் கீதம் புனைய……
ஒரு காதலில் உறைந்துள்ளோல் மட்டுமே அம்மணத்தைத் தர முடியும் என்ற சிந்தனையாக இருக்குமோ
என்பது என் மனத் திண்ணம்….
அருணா ! நீ வாழ்த்துரை கூறக் கேட்டால்தான் என் மனம் வாழ்த்துரை
வழங்குமா என்ன? வர்ண ஜாலமாய் உன் வடிவத்துடன் உறைந்தவளே நான்தானே!!!!
கவிதைக்குப் பொய்யழகு என்பர் – அதனால்தான் உனக்குக் கவிதை எழுத
எனது கரம் முனையவில்லை …. காவியமாக கதல் கடிதம் எழுதுகிறேன்.
முதன் முதல் வாய்ப்புக் கொடுத்தவள் நீ!
முத்தமிழை மொழியச் செய்தவளும் நீ !!
மூவேந்தர் வழி வந்தவளும் நீ !!!
மூவுலகம் போற்ற வாழப் போறவளும் நீ !!!!
தாயின் முந்தானையைப் பிடித்துத் திரிந்த உன் கரம் இன்று …
உன் முந்தானையைப் பிடிக்க முத்தாய் முத்துக் குமரனின் முழு
ஆசியுடன் முழு மதியாய் கிடைத்துள்ளான் உன் காதலன்.
அக்காதலனோடு கண்ணிறைந்த வாழ்க்கை வாழ வேண்டுமென்பதே
மடியில் தூளியிட்டவளுக்கும் மற்றோருக்கும் ஆசை ஆசியும் கூட….
இந்த ஆசிகளோடு அடியெடுத்து வைக்கும் உன் அத்தை வீட்டை சொத்தாய்,
சுகமாய் இன்றிருக்கும் மகிழ்ச்சிபோல் என்றென்றும் பேரோடும்
புகழோடும்
வாழவைக்கவும் வாழவும்…… பெற்றோர்கள் பெயர் போற்றவும் வாழ முற்படுவாயாக…!!!!
பிறர் வாழ்த்துவதுபோல் வள்ளுவன்-வாசுகி, ஷாஜகான்-மும்தாஜ் போல்
வாழ்க என எனக்கு வசை பாடத்தெரியாது……..
ஏன் பிறரைச் சார்ந்து வாழ வேண்டும் ….. அருணாவும் – இரமேசும்
போல எனப்
பிறர் மெச்சுமளவிற்கு அரிய கலைகளை கட்டிய கணவனோடு புனைந்து
காவியமாக்கு…உனது காதல் கீதத்தை…..
நேரமாகிறதே என நேசமுள்ளவர்கள் என்னை வசைபாடுவதற்கு முன் நெஞ்சிலுள்ளவைகள்
எல்லாம் கூறிவிடலாமென்றால் நேரம் போதாதே……..
ஏனென்றால் என் நெஞ்சில் நிழலாய் பதிந்துவிட்டாயே!!!!
பதிந்துவிட்ட உன்னை இன்று பத்திரமாய் உனது பதியிடம் அதிபதியாக்கி
விட்டேன்…இனி அம்மனதில் அம்மணியாய் ஆடல் புரியவும், ஆன்றோர்கள் வழி நடக்கவும், ஒருமித்த
கருத்துடனும் ஓங்குக!!! உயர்க!!!! வாழ்க!!!!!வாழ்க!!!!! வளமுடன் என்றென்றும்!!!!
புரிந்து கொண்டவள்
சித்ரகலா
கலைச்செல்வன்
No comments:
Post a Comment