Search This Blog

Saturday, November 21, 2015

கல்வி கரையில............. நாடகம்





கல்வி கரையில.............
கதாபாத்திரங்கள்:
தாத்தா - வீட்டில் மூத்தவர், (ஓய்வூதியம் வாங்கிக் கொண்டிருப்பவர்).
அப்பா - சரவணன், தாத்தாவின் மகன், (அலுவலக வேலையில் இருப்பவர்).
அம்மா - சரவணனின் மனைவி, (தாத்தாவின் மருமகள்), படிப்பறிவில்லாதவள்.
அஸ்வின் - சரவணனின் மகன், (10 ஆம் வகுப்பு)
சுதா - சரவணனின் மகள் (12ஆம் வகுப்பு)
கீதா - சுதாவின் தோழி
நண்பர்கள் - அஸ்வினின் நண்பர்கள்
காட்சி 1
நேரம் : காலை   
கதாபாத்திரங்கள்: தாத்தா, அப்பா, அம்மா, மகன், மகள், நண்பர்கள்.
(வீட்டினுள் தாத்தா நாற்காலியில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருக்கின்றார், மருமகள் சமையலறையில்..........)
அம்மா
ஏய் கிழவா சும்மாவே உட்காந்துட்டு இருக்கியே ரேசன் கடைக்கு போயாவது அரிசி வாங்கிட்டு வரலாம்ல.......(எரிச்சலோடு முனுமுனுத்துக்கொண்டே.......) என்ன பென்சன்லாம் வாங்கியாச்சா? ம்ம்ம்ம்ம்ம் .......
சரி நானே ரேசன் கடைக்குப் போறேன்

தாத்தா
(வருத்தப்பட்டு)அவனவன் செத்தாதான் நரகத்து போவான், ஆனா நான்.. ..... ஆண்டவா காப்பாத்து

அப்பா
என்ன காலையிலே உங்க கச்சேரிய ஆரம்பிச்சுட்டீங்களா?

அம்மா
யோவ் என்னயா சொன்ன?

அப்பா
அய்யோ! அம்மா உன்ன ஒன்னும் சொல்லல.......

அப்பா
எல்லாம் என் அப்பன சொல்லனும், பொண்ணக் கட்டிவைக்கச் சொன்னா புளியமரத்தக் கட்டி வச்சிருக்காரு(மெதுவாகக் கூறுதல்)

தாத்தா
சரவணா......சரவணா......

அப்பா
இதோ வர்றேன்பா......

அப்பா
என்னப்பா? ஆமா சுதாவ எங்க?

மகன்
அவ ரிசல்ட் பார்க்க போயிருக்காப்பா......

அப்பா
ஓ......அப்போ உன் ரிசல்ட் எங்கடா?

மகன்
அது எப்பவும் மாதிரிதான் பா......

அம்மா
பிள்ளைய பொறுப்போட வளர்க்கலனா இப்படித்தான், வீட்ல நீரும் அவன கொஞ்சமாவது படிக்க வச்சிருக்கனும்.

அப்பா
 நான் படிக்காத கல்வியெல்லாம் அவன் படிக்கனும்னு நினைச்சுதான் அவன இவ்ளோ பெரிய ஸ்கூல்ல சேர்த்தேன், ஆனா அவன் என்னடான்னா சேரக்கூடாத ப்ரன்ட்ஸ்ங்க கூட சேர்ந்து......

அம்மா
இவரு பெரிய அறிவுக் களஞ்சியம்,
என்னடா உன் அப்பா வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சுகிட்டு இருக்காரு!. இவருக்கு என்ன ஆச்சுனு கேளு?

அப்பா
எக்கேடாவது கெட்டு போங்க......


(அச்சமயம் நண்பர்கள் உள்ளே வருதல்)
அப்பா
வாங்கடா வாங்க...... என்ன உங்க ரிசல்டுலாம் என்ன ஆச்சு பா?

நண்பன் 1
உங்க மகன் கதைதாங்க

அப்பா
நல்ல ப்ரண்ட்ஸ்......(முனுமுனுத்துக்கொண்டெ)

நண்பன் 2
வீட்ல அப்பா கத்துராருன்னுதான் இங்க வந்தேன், இங்கயுமாடா? ......

அப்பா
அப்பாவுக்கு ரொம்ப மரியாத குடுக்குறீங்கடா...... நல்ல ப்ரண்ட்ஸ் இருந்தாதான உருப்படுவீங்க......

அப்பா
என்ன...... சாப்பாடு ஆச்சா?(மனைவியிடம்)

அம்மா
அடுப்படில வச்சுருக்கேன் போய் எடுத்து போட்டு சாப்பிடுங்க

நண்பன் 1
என்னடா உங்க அப்பா ரொம்பவே அளந்துகிட்டு இருக்காரு?.

மகன்
அந்த ஆள் கிடக்குறாரு விடுடா......

நண்பர்கள்
(அவர்களுக்குள் பேசிக் கொள்ளுதல்) ஃபெயில் ஆனது கஷ்டமா இருக்குடா...... இதை மறக்க எங்கயாவது போலாமா?

நண்பன் 2
சினிமாக்கு போலாம்டா

மகன்
எங்கடா காசு இருந்தாதானடா......

நண்பன் 3
நண்பன் 1-ஐ பார்த்து) என்னடா வாட்சு புதுசா இருக்கு?

நண்பன் 1
ஏய் சும்மா இருங்கடா எங்க அம்மாவுக்கு தெரிஞ்சுது துடப்பக்கட்டையால அடிப்பாங்க

நண்பன் 2
காணாம போச்சுனு சொல்லிடு......

மகன்
ஏய் விடுங்கடா நான் பார்த்துக்கிறேன்டா

(அப்பாவிடம் மறுபரிட்சைக்கு பணம் கேட்டு வாங்குவதாக மனதிற்குள் நினைத்தல்)

மகள்
(உள்ளே நுழைதல்) தாத்தா......தாத்தா...... ஆசிர்வாதம் பண்ணுங்க, நான்தான் ஸ்கூல்ல ஃபர்ஸ்ட் மார்க் வாங்கிருக்கேன் தாத்தா.

தாத்தா
ரொம்பா சந்தோஷம்மா, எனக்கு தெரியும் நீதான் ஃபர்ஸ்ட் வருவன்னு, நீ படிச்சு கலெக்டர் ஆகனும்மா அதான் என்னோட ஆசை. ‘படிப்பு நடிப்பா இருக்கக்கூடாது கண்ணு இல்லன்னா வாழ்க்கை பெரிய இடிப்பாயிடும்’ நீ ஆசைப்படுறதெல்லாம் நடக்கும்மா. உன் படிப்புக்கு என்ன வேணும்னாலும் கேளு நான் செய்றேன்.

மகள்
ம்ம்ம்ம்ம் தாத்தா, லயன்ஸ் க்ளப்ல தமிழ் நாடு அளவுல +2 முடிச்சவங்களுக்கு போட்டித்தேர்வு ஒன்னு நடத்துறாங்க, அதுல ஃபர்ஸ்ட் வர்றவங்களுக்கு அவங்க என்ன ஆசைப்பட்டு படிக்குறாங்களோ அதுக்கான மொத்த செலவயும் அவங்களே ஏத்துக்கிறாங்களம்.

தாத்தா
ஓ...... சரி சரி. நீ ஆசைப்படுற மாதிரியே நல்லா படிச்சு செலக்ட் ஆகி கலெக்டராகும்மா.

மகள்
சரி தாத்தா, கண்டிப்பா உங்க ஆசைய நிறைவேத்துவேன்

அப்பா
வாழ்த்துகள் மா, தம்பிதான் சேரக்கூடாத பசங்களோட சேர்ந்து கெட்டுகிட்டு இருக்கான். நீயாவது இவ்ளவு மார்க் வாங்குனியே. அதுவே எனக்கு பெரிய சந்தோஷம். நீ பெரிய ஆளா வரனும்மா.

மகள்
டேய் தம்பி உன் ரிசல்ட் என்னடா ஆச்சு?

மகன்
ம்ம்ம்ம் ரிசல்டுதான வந்துருச்சு வந்துருச்சு.

மகள்
அடப்பாவி. எந்த சப்ஜெக்டுடா?

மகன்
ம்ம்ம்ம்ம். கணக்குதான்

மகள்
டேய் பெரிய கணக்கு 5 போட்டாலே பாஸ் ஆயிடலாமே. நீ எத்தனடா போட்ட

மகன்
ம்ம்ம்ம்ம்ம். மேலருந்து 3, கீழேருந்து 2...... போ......

மகள்
நீ திருந்தவே மாட்ட டா......


(அச்சமயம் பழைய பாத்திரங்களை வாங்குபவன் கூவிக்கொண்டு வருதல்)

மகன்
அம்மா...... அம்மா...... பழைய பாத்திரக்காரன் வந்திருக்கான்மா

அம்மா
அடக் கடவுளே இந்த நேரம் பார்த்து உன் அப்பா இல்லையேடா


காட்சி 2
நேரம் :
கதாபாத்திரங்கள்: மகன், மகள், நண்பர்கள்.
(அஸ்வினும் அவனுடைய நண்பர்களும் சினிமா தியேட்டருக்கு அருகில் நின்று பேசிக்கொண்டிருன்றனர்)

அஸ்வின்
சட்டை அழகா இருக்குதுடா எப்ப எடுத்த?


நண்பன் 2

ம்ம்ம் கடைக்காரன் குனியும்போது எடுத்தேன்
நண்பன் 3
டிக்கெட் கிடைக்கலடா,
சரி கவலைப் படாத ப்ளாக்லயாவது வாங்கித் தர்ரேன்டா

அஸ்வின்
அப்படியே உதைச்சேன்னா திருச்சில போய் விழுந்துருவ

நண்பன் 3
உதைக்குறதுதான் உதைக்குற கொஞ்சம் தள்ளி உதை, திண்டிவனத்துல விழுந்தா போதும் அப்படியே பாட்டி வீட்டுக்கு போய்ட்டு வந்துருவேன்


நண்பனுள் ஒருவன்

(மூச்சு வாங்கியபடி) டிக்கெட் வாங்கிட்டேன்...........
[அந்நேரம் அக்கா(மகள்) சென்டரிலிருந்து திரும்பி வந்து கொண்டிருக்கும் வழியில், அஸ்வினை தியேட்டர் முன் அவன் நண்பர்களுடன் பார்க்கிறாள்]
நண்பன் 1
அதோ பாருடா சோடாபுட்டி

அஸ்வின்
ஐயோ மாட்டிகிட்டேன்டா........
வீட்ல கச்சேரிதான்.

சுதா
(தம்பியை முறைத்தபடி) வீட்ல அப்பாட்ட சொல்றேன்

அஸ்வின்
சொன்ன கண்ணு ரெண்டைடும் நோன்டிடுவேன்

சுதா
போடா

காட்சி 3
நேரம் : காலை
கதாபாத்திரங்கள்: அம்மா, அப்பா, மகன், மகள்.
[மகன் மறுபரிட்சைக்கு செல்லும் முன் கடவுளிடம் வேண்டிக் கொண்டிருக்கின்றான்]

அம்மா
இங்க டீ வச்சனே எங்க காணோம்?

அப்பா
ஐய்யோ அது டீயா நான் சுடுதண்ணீனு நினைச்சு வாய் கொப்புளிச்சுட்டனே!!...

அம்மா
சரிதான் நீ நினைப்பயா, நினைப்பயா

மகள்
தாத்தா......தாத்தா......தாத்தா எங்கம்மா?

அம்மா
அது எங்கயாவது போயிருக்கும்

அப்பா
கொஞ்சமாவது மரியாதை குடுத்து பேசுறியா?

அம்மா
ம்ம்ம் இவ்வளவு மரியாதை போதும்

அப்பா
எல்லாம் என் தல எழுத்து

மகள்
அப்பா, தம்பிய தியேட்டர்ல அவன் ஃப்ரண்ட்ஸோட பார்த்தேன் பா

அப்பா
அவன் பஸ்சுக்கு தான காசு வாங்கிட்டு போனான்.......
அவன் வாழ்க்கை என்னாகப் போகுதோ??
அவன பெத்து வளர்த்ததுக்கு 4 மாடு வளர்த்திருந்தா தினமும் 5லிட்டர் பாலாவது கொடுத்துருக்கும்.

மகன்
பிள்ளையாரப்பா என்ன எப்டியாவது இந்த தடவ பாஸ் பண்ண வச்சுரு......

அப்பா
நான் இங்க கத்திகிட்டு இருக்குறேன் நீ சிவன் முன்னாடி நின்னு பிள்ளையார வேண்டிட்டு இருக்க??

மகன்
இது யாரு??      சிவன், பிள்ளையாரோட அப்பாதான,

அப்பா
நீ திருந்தவே மாட்டடா . எத்தனை தடவ திரும்பத் திரும்ப சொன்னாலும் நீ திருந்தவே மாட்டடா........

மகன்
திரும்பி சொன்னா எப்டி புரியும் நேரா சொல்லுங்கபா.


காட்சி 4
நேரம் :
கதாபாத்திரங்கள்: தாத்தா, மகன், மகள், அம்மா

மகன்
தாத்தா சினிமாக்கு போகனும் காசு குடு

தாத்தா
எங்கிட்ட சுத்தமா காசு இல்லடா

மகன்
பரவாயில்ல தாத்தா நான் சுத்தம் பண்ணிக்குறேன்.

தாத்தா
வாழ்க்கைய ரொம்ப விளையாட்டா எடுத்துக்குறப்பா, ஒழுக்கம் பழக்கமா இல்லன்னா, அதுவே வாழ்க்கையில் பெரிய கலக்கமாயிடும்

மகன்
அட தள்ளு... ஒவ்வொரு வீட்லயும் ஒன்னு கெடக்குது...

[அச்சமயம் மகள் போட்டித் தேர்வினில் வெற்றி பெற்று வீட்டினுள் நுழைதல்]

அப்பா
ரிசல்ட்டு என்னாச்சுமா

மகள்
நான்தான்பா ஃபர்ஸ்ட் மார்க்.

தாத்தா
ரொம்ப சந்தோஷம்மா

மகள்
தாத்தா நான் திருச்சிக்கு போகப்போறேன். வரும்போது கலெக்டராதான் வருவேன்

[தோழி உள்ளே வருதல்]
அப்பா
வாம்மா.. எப்படி இருக்க? உன் ரிசல்ட்டு என்னாச்சுமா?

தோழி
நல்லாயிருக்கேன் அங்கில், நான் செலக்ட் ஆகல. இருந்தாலும் டாக்டர் படிப்புக்கு பதிவு செஞ்சிருக்கேன்.

அப்பா
கவலைப்படாத அதுல செலக்ட் ஆகிடுவ

தாத்தா
ம்ம்ம் கவலைப்படாதமா, முடியும் முடியும்னு தன்னம்பிக்கை இருந்தாதான் எதையும் சாதிக்க முடியும். நீ கண்டிப்பா வாழ்க்கையில முன்னுக்கு வருவ.

காட்சி 5
நேரம் :
கதாபாத்திரங்கள்: அஸ்வின், நண்பன், அக்காவின் தோழி(கீதா)
[மகன் படிப்பில் தோல்வியை சந்தித்ததால் படிப்பைக் கைவிட்டு வேறு வழியின்றி ஒரு மளிகைக் கடையில் தினக்கூலிக்கு வேலைக்கு சேர்கிறான், அச்சமயம் வேலைக்கு சென்று திரும்பும் வழியில் தன் நண்பனை சந்திக்கிறான்]

 நண்பன்
டேய் அஸ்வின் எப்டிகீர? என்ன தெரியுதாடா?

அஸ்வின்
என்ன கீரையா?

 நண்பன்
இல்லடா எப்டி இருகன்னு உன்னதான் கேட்டேன், கீரையை பத்தி கேட்கல உன்னதான்டா கேட்டேன்...

அஸ்வின்
ம்ம்ம்ம் எப்படிடா கண்டுபிடிச்ச? எப்படி இருக்க? கொஞ்சம் உடம்பு சரி இல்லடா எனக்கு.

நண்பன்
அதுக்கெல்லாம் கவலப்பட்டா எப்படி.. டாக்டர்கிட்ட போகவேண்டியதுதான

அஸ்வின்
 நீ வேறடா, டாக்டர் ஃபீஸ நினைச்சாலே ........ ஐய்யோ. குழந்தை 10 பைசா விழுங்கிடுச்சுன்னு போனா அவரு 100 ரூபாயை விழுங்கிடுறாறுடா.

நண்பன்
டேய் அதோ பாருடா, உன் அக்காவுடைய ஃப்ரண்டு வர்றாங்க.

அஸ்வின்
ம்ம்ம் ஆமாடா. இப்ப அவங்க டாக்டர் ஆகிட்டாங்க தெரியுமா.

[அச்சமயம் தோழி அருகில் வருதல்]
தோழி
என்ன அஸ்வின் எப்படி இருக்க? உடம்பு எதுவும் சரி இல்லையாடா?

அஸ்வின்
ம்ம்ம் அக்கா, அதை விட மனசு சரி இல்ல.

தோழி
என்ன ஆச்சுடா?.

அஸ்வின்
அப்பாவுக்கு வேற வேலை போச்சு, நானும் சரியாக படிக்காததால், சரியான வேலைக்கு போக முடியல, அக்கா படிச்ச வந்தாதான் எங்க வீட்டு கஷ்டம் தீரும். அன்றே நீங்க சொன்ன வார்த்தையெல்லாம் கேட்காம விளையாட்டா திரிஞ்சதனாலதான் இப்ப ரொம்ப கஷ்டபடுறேன்.

தோழி
அழாதடா. அழாத. உன் அக்கா எப்ப வர்றா??

அஸ்வின்
இந்த மாதம் வர்றா. நீங்க எல்லாம் படிச்சு முன்னுக்கு நல்லா வந்துட்டீங்க. நாங்க யார் பேச்சையும் உதவாக்கரையா ஆயிட்டோம்.

நண்பன்
டேய் இதெல்லாம் நினைச்சா எப்படிடா, ஃபீலிங்க கட் பண்ணுடா. வாடா ஜாலியா பேசிக்கிட்டே போலாம்டா.

அஸ்வின்
ஃப்ர்ஸ்ட் உன்ன கட் பண்றேன்டா.

காட்சி 6
நேரம் :
கதாபாத்திரங்கள்: அஸ்வின், சுதா, அப்பா, அம்மா, தாத்தா, தோழி(கீதா)
[அக்கா கலெக்டர் படிப்பை முடித்து விட்டு வேலையுடன் வீட்டுக்குத் திரும்புகிறாள்]
தாத்தா
டேய் சரவணா, எனக்கு பல்லே இல்லடா, ஆனா உன் வீட்டுக்காரி பல் விலக்குனாதான் காபி தருவேன்னு சொல்றா.

அப்பா
உனக்காவது பரவா இல்லப்பா, எனக்கு பாத்திரம் கழுவுனாதான் காபி தருவேன்னு சொல்றா.

தாத்தா
நாம எவ்வளவு கஷ்டப்பட்டாலும் இவங்க திருந்தவே மாட்டாங்க..

அம்மா
அங்க என்ன சத்தம்?

அப்பா
சும்மா பேசிகிட்டு இருக்கோம்மா

மகன்
ஐ அக்கா வந்தாச்சு!!

அம்மா
வாம்மா என் செல்ல ராசாத்தி

தாத்தா
படிப்பெல்லாம் நல்ல படியா முடிஞ்சுதாம்மா

அக்கா
ம்ம்ம் நல்லபடியா முடிஞ்சுது தாத்தா
Training முடிஞ்சு என்ன கலெக்டரா appoint பண்ணிட்டாங்க தாத்தா

தாத்தா
ரொம்ப நல்லதும்மா, உன் முயற்சி உன்ன கைவிடலம்மா

மகன்
வாழ்த்துகள்அக்கா

அக்கா
ஏய் தம்பி எப்படிடா இருக்க?

மகன்
ஏதோ இருக்கேன் அக்கா?

அக்கா
உன் வாழ்க்கையை நீயே கெடுத்துகிட்ட.
சரி கவலைப்படாத, இப்பவும் எதுவும் குறஞ்சு போகல. கல்விக்கு என்னைக்குமே முடிவே இல்ல, இனியாவது நான் சொல்றத கேளு.
எதாவது computer course சேர்ந்து படி. உன்ன நானே படிக்க வைக்கிறேன். இதற்கு மேல நீ படிக்கனும்னு ஆசைப்பட்டாலும் அதற்கு நான் உதவி செய்றேன். உன் முயற்சி இருந்தா போதும், எதையும் சாதிக்கலாம் தம்பி, please இனிமேலாவது வாழ்க்கையை உன் வாழ்வுக்காக பயன்படுத்து.

மகன்
(மவுனத்துடன், ஆனால் உறுதியுடன் தலையசைத்தல்)


[தோழி வருதல், இருவரும் பேசிக் கொள்ளுதல்]
சுதா
உன்ன பார்க்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு, உன்ன டாக்டரா பார்க்குறதுல எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.

தாத்தா
எனக்கும் கூட ரொம்ப பெருமையா இருக்கு.
உங்க நட்பில் கல்வியின் ஆதிக்கமும் அதிகமாக இருந்ததால் சாதிக்க முடிந்தது. கல்வி என்னும் பயிரை நீங்க அழகா வளர்த்தனால்தான் இன்று அழகான கல்விப் பயனை அனுபவிக்கிறீங்க. இனி உனக் வாழ்க்கையில துன்பமே அனுகாது, அதுக்கு நீங்க கல்வி என்னும் வேலியை முறைப்படி அமைச்சுட்டீங்க .
நட்பு என்பது வாழ்க்கையில் மிக முக்கியம், அதைக் கடக்கும் போது சரியில்லைன்னா வாழ்க்கையே சரியில்லாம போகிடும். வாழ்க்கையின் சோதனைக்கும், சாதனைக்கும் நட்புதான் காரணம்
கூடா நட்பு கேடாய் முடியும், இளமையில் கல்வி சிலையில் எழுத்து.
அனைவரும் புரிந்து நடந்தால், அவரவர் வாழ்க்கை இனிதாய் அமையும்.


No comments:

Post a Comment

Translate