Search This Blog

Saturday, November 21, 2015

எனது மாணவர்கள் – 2015 -2016 ( குழந்தைகள் தினம் )



எனது மாணவர்கள் – 2015 -2016 ( குழந்தைகள் தினம் )
விண்ணின் விழி நீர் மண்ணின் வழி நீராக
வானம் நல் வசை பாடி நல்லறம் செய்தும்
மானிடனுக்கு மணம் தந்தும் மண் மணக்கவும்
மக்கள் தழைக்கவும் செய்தது. – இதனால் செழித்தது இவ்வையகமெல்லாம்
செழுமை பெற்றது செந்தமிழ் போன்று….நிலையும் பெற்றது.
நிலைபெற்ற நிலவுலகில் மேலும் நிலைக்கச் செய்ய 
நிலமகள் பெற்றெடுத்த  நிலைத்த செல்வங்களே
என் இனிய மாணவச் செல்வங்கள்.- இவர்கள்
எளிமையின் உறைவிடம்
எண்ணத்தின் இருப்பிடம்
எதார்த்தத்தின் நவரசம்
எட்டுத் திக்கும் அவன் வசம்
எண்ணியதை முடிப்பவன்
எள்ளலை எரிப்பவன்
எக்காலத்தும் துணை நிற்பவன்
எரிமலையாய் செயலாற்றுபவன்
எதிராளி கண்டு அஞ்சாதவன்
எட்டிக்கனியாய் திகழ்பவன்
எங்கெங்கு காணின் சக்தியவன்
எஞ்சோலைக் கிளியவன்
என்னால் முடியும் என்பவன்
எந்நாட்டவர்க்கும் உரித்தானவன்
என் மாணவனாக வாழ்பவன்
என்றும் என் வழி நடப்பவன்
எழுச்சி பெறச் செய்பவன்
எனதருமைக் குழந்தைகளாம்
என்றும் என் வாழ்வில் வரும் வசந்தகளாம்
என் இதயத்தின் சிம்ம சொப்பனங்களாம்.
மேலும் எனது மாணவர்கள்……………..
நல்லறம் போற்றுபவர்கள்
நாணயமானவர்கள்
நிகரற்றவர்கள்
நீங்கா அன்புடையவர்கள்
நுண்ணறிவுடையவர்கள்
நூலோர் போற்ற வாழ்பவர்கள்
நெஞ்சமெல்லாம் நிறந்தவர்கள்
 நேருவின் நேயர்கள்
 நைல் நதி போன்றவர்கள்
நொடிக்கு நொடி எண்ணுபவர்கள்
நோபல் பரிசுக்கு உகந்தவர்கள்
நௌரோஜி வம்சத்தவர்கள்
அவர்களே  நானறிந்த மாணவர்கள் 



    

No comments:

Post a Comment

Translate