Search This Blog

Monday, November 23, 2015

கலாம் காண விழையும் கதா நாயகர்கள்- (2015-16)கலாம் காண விழையும் கதாநாயகர்கள்
எனது பத்தாம் வகுப்பு மாணவர்கள் கலாமின் பிறந்த நாள் முன்னிட்டு எழுதிய கவிதைத் தொகுப்புகள்(2015-16)

கனவே கனவே கலையாதே
கலாமின் கனவை கலைக்காதே
இந்தியாவின் அனைத்து கைகளும் சேர்க்கை
இதுவே எங்களது ஒரே கொள்கை
பணபலத்தினால் நாட்டில் நடக்கிறது கொள்ளை
பட்டி தொட்டியெங்கும் நெஞ்சில் நிறுத்தினாய் உனது சொல்லை
கண்டதைக் கற்கும் பண்டிதர்கள்
கலாமின் தொழில் நுட்ப வல்லுனர்கள்
தரமிக்கக் கல்வியைப் படிக்க வைத்தாய்
தார்மீகக் கல்வியைப் புரிய வைத்தாய்
இளைஞர்கள் ஒவ்வொருவரும் உனக்குள் ஒருவன்
இளைஞர் நெஞ்சில் நீ என்றும் தனி ஒருவன்.
                        ---- நவமோகன கிருஷ்ணன்.

மாணவர்கள்  இந்த உலகின் மிகப் பெரிய சக்தி
நாட்டை வளர்ந்த நாடாக மாற்றுவது மாணவர்களின் புத்தி
அவர்கள்தான் எதிர்கால கதாநாயகர் என்பது யுக்தி.
நமது  நாடு விதை போன்றது
அதனை வளர்த்து பாதுகாப்பது உங்கள் கையில்தான் உள்ளது.
மாணவர்களே சிறந்த கல்வி பெற வேண்டும்
உங்களின் ஆளுமைத் திறனை மேம்படுத்த வேண்டும்
நீ கனவு கண்டாய் நேற்று
அதனை நிறைவு செய்ய வேண்டும் இன்று
இந்தியா ஒரே குடும்பம் என்று நினையுங்கள்
உங்கள் கடமையை ஆற்றுங்கள்.
                                ---- அதிதிப்ரியா

காலத்தை வென்ற கலாம்
உமக்கு நாங்கள் சொல்கிறோம் சலாம்
நீ கனவு கண்டதோ எங்களைப் பற்றி
நாங்கள் எடுத்துச் செல்வோம் உன் பெயரை உயர்த்தி
 நாங்கள் வைத்தோம் உன்னை முன் மாதிரியாக
உங்கள் கருத்தை ஏற்று நடப்போம் உறுதிமொழியாக
நீ தழ்வாய் இந்தியாவின் பொக்கிசமாக
உன் ஆசையை நிறைவேற்றுவோம் நிச்சயமாக
நீ கூறியதோ எங்களைக் கனவு காணுங்கள் என்று
அந்தக் கனவை செயல்படுத்துவோம் இன்று
கலாம் காண விழையும் கதாநாயகர்கள்
நாம் உருவாக்குவோம் நாளைய சாதனையாளர்கள்.
                           பி.வி.யாமினி

இந்தியாவின் விதைகளே !!!!
நாம் கலாம் காணும் கதாநாயகர்களே
நாம் னாட்டின் முத்தாக இருக்க வேண்டும்
சமுதாயத்தின் நினைவாக இருக்க வேண்டும்
அறிவியல்,கணிதம்,ஆங்கிலம்,விளையாட்டு என
அனைத்திலும் அனைவரும் செய்திட நீ மாறு
நாட்டின் திருமூலமாகப் படையேறு நீ
உலகத்தின் வைரமாக விலையேறு
இதுவே கலாமின் ஆசை - அதில்
நீ  நிற்க வேண்டும் முதல் வரிசை
அவர் சொல்லை பின்பற்று முன்னேற்ற
நீ நம் நாட்டை அடுத்த படியில் ஏற்ற….
n  க. அர்ஜுன் பரத்

மாணவர்கள் நம் நாட்டின் கண்கள்
அவர்களிடம் இருக்க வேண்டும் நல்ல பண்புகள்
இதனால் வகுக்கப்படும் நல்ல பாதைகள்
அதனால் வராது கொடுமையான சோதனைகள்
உழைக்கலாம்,மதிக்கலாம்,படிக்கலாம்
இதுபோன்ற வார்த்தைகளில் நீங்காமல் வாழலாம்
இதனை நமக்குப் போதித்தவர் அப்துல்கலாம்
கலாம் நம்மிடம் காட்டினார்  நேசம்
கைமாறாக நாம் உருவாக்க வேண்டும் தேசம்.
                                --- அம்ருதா.மு

கலாம் காண விழையும்  தேசம் – அதை
நிறைவேற்ற தேவை நம்  நேசம்
அவர் கனவை நிறைவேற்றுவது நமது கடமை
தவறினால் அது உன் மடமை
குழந்தைகளை  நேசிப்பதில்
இவர் நேருக்கு நிகரானவர்
இளைஞர்களைக் கவர்வதில்
இவருக்கு நிகர் இவரானவர்
கலாம் கண்ட கனவை நிஜமாக்குவோம்
கதாநாயகர்களாய் உருவாகுவோம்.
                                ___ ஆ.பிரித்தி

கனவு கனவு என்பதோ உனது கொள்கை
அதை நிறைவேற்றுவதே எமது கொள்கை
2020-ல் இந்தியா மாறும் வல்லரசு
மாணவர்களாகிய நாம் கொட்டுவோம் முரசு
அக்னிச் சிறகுகளாய்ப் பறக்கிறோம் நாங்கள்
உங்கள் கனவை நினைவாக்குவோம் நம்புங்கள்
கனவுகளைப் புயல் அடிக்கும்போதுப் பிறக்க விடாமல்
மழைச்சாரலின்போது விதைக்க விடுவோம்
கதாநாயகர்களாய் மட்டும் இல்லாமல் கனவு கலையும் முன்
அக்கனவை நனவாக்கும் நாயகர்களாயும் வாழ்வோம்
கலாமின் வாழ்க்கையோ ஒரு சரித்திரம்
மாணவர்களுக்கு என்றும் ஒரு உதாரணம்
                                     ----தி.வி.தேஜஸ்வி


  

  

No comments:

Post a Comment

Translate