- தகுந்த காலத்திற்குள் வகுப்பிற்குள் செல்லுதல்.
- ஆசிரியரை வணங்குதல்.
- ஆசிரியரின் குணத்திற்கு ஏற்ப பழகுதல்.
- நீர்வேட்கை கொண்டவனின் விருப்பம் போல் கற்பதில் விருப்பமுடைதல்.
- ஓவியத்தில் எழுதிய பாவை போல் மனம், மொழி, மெய்களை அடக்குதல்.
- காதுகளை கல்வியை பருகும் வாயாகவும், மனத்தை உணவை கொள்ளும் இடமாகிய வயிறாகவும் கொள்ளுதல்.
- ஆசிரியரிடம் கருத்துக்களை பலமுறை கேட்டறிதல், கேட்ட கருத்துக்களை மறந்து விடாமல் உள்ளத்தில் பதிய வைத்தல்.
- ஆசிரியர் 'போ' என்று சொல்லிய பின் செல்லுதல்.
[பொருள்:- தகுந்த-சரியான நேரத்தில், நீர்வேட்கை- தண்ணீர் தாகம், பாவை- சிலை; பதுமை ]
இவையே சிறந்த மாணவனின் பாடம் கேட்கும் முறை.
No comments:
Post a Comment