அன்பெனும் மழையாய்
கல்வியெனும் கரும்பாய்
கார்மேகக் கவிதையாய்
இரக்கமுள்ள இறைவியாய்
கிளர்ந்தெழும் தருவாய்
ஈசனின் புதல்வியாய்
கீதத்தின் சாரமாய்
உன்னதத்தின் ஜோதியாய்
குலம் வளர்க்கும் கோபுரமாய்
ஊழ்வினையறுக்கும் விடியலாய்
கூடிவாழ் பண்பை வளர்க்கும் பாரதத்தாயாய்
எள்ளளவும் தளராத தாமரையாய்
கெட்ட எண்ணத்தை நீக்கும் கெஜவல்லியாய்
ஏட்டைப் புகட்டும் பொற்பதமாய்
கேள்வி ஞானம் வளர்க்கும் வளர்பிறையாய்
ஐயங்களை அகற்றும் பஞ்சரசமாய்
கைத்தலம் பற்றுவோருக்கு ஐயாய்
ஒன்றென்று முழங்கும் முத்தமிழாய்
கொள்கையைப் போற்றும் பிராட்டியாய்
ஓம் எனும் மந்திரத்தின் மகளாய்
கோ போன்று கலை பயிற்றும் கோமகளாய்
ஔடதத்தை போக்கும் ஔவையாய்
விளங்குபவர்களே......
எனதருமை வாணி
வித்யாலயாவின்
ஆசான்கள்.
ஹைய்.... !!
ReplyDeleteஅ,ஆ மற்றும் க,கா வரிசையா??