Search This Blog

Thursday, November 18, 2010

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை எனும் பூவெடுத்து

      நாளெல்லாம் சூடிக்கொள்-

அது விரைவில் சூளுரைக்கும்

      வெற்றி எனும் கோட்பாட்டை..

கோள்கள் ஒவ்வொன்றும்

      சூரியனைச் சுற்றி வருவதைப்போல்- நீ

முயற்சி எனும் புள்ளியின் துணையோடு

      வெற்றி என்ற வட்டத்தைச் சுற்றி வா!!

வளர வளர வெற்றியானது

      உனது வாழ்வை வளமாக்கச் செய்யும்..

வளமுள்ள நம் தமிழைப் போன்று

      தனியாப் புகழுடனும் -நீ

தரணினியிலே தனக்கென ஓர் இடத்தைத்

      தயங்காமல் பிடிக்கவும்;

பீறு நடை கொண்டு எழவும்;

      எயிறின் ஒளிபோல்

என்றென்றும் ஒளிரவும்;

      ஓங்கவும் - நீ .........உன்

தன் என்று நம்பி - உன்

      கை மேற்கொண்டு செயல்பட்டால்

இமயமும்; எரிமலையும்

       உன் வசப்படும்.....

No comments:

Post a Comment

Translate