எங்கள் வீட்டு குட்டி
அவன் தங்கமானக் குட்டி
வாலை ஆட்டும் குட்டி
வாலுத் தனக் குட்டி
அழகானக் குட்டி
ஆணவக் குட்டி
அறிவானக் குட்டி
அங்குமிங்கும் அலையும் குட்டி
ஓடியாடும் குட்டி
ஒய்யாரமாய் தூங்கும் குட்டி
பாசக்காரக் குட்டி
பயப்படாதக் குட்டி
ஊர் சுற்றும் குட்டி
நல்ல உதை வாங்கும் குட்டி
சொன்ன பேச்சுக் கேட்காதக் குட்டி
சொகுசு மெத்தையில் தூங்கும் குட்டி
கண்டபடி கத்தும் குட்டி
கண்களால் மயக்கும் குட்டி
கட்டழகுக் குட்டி
கட்டுக்கடங்காதக் குட்டி
வெள்ளை அழகுக் குட்டி
வெள்ளை மனக் குட்டி
பட்டு போன்ற குட்டி
பாலைக் குடிக்கும் குட்டி
பேப்பரைத் தின்னும் குட்டி
பேச முடியாதக் குட்டி
தங்க குணம் குட்டி
தவறுகள் செய்யும் குட்டி
ஓடி ஒளியும் குட்டி
ஒப்பிலாக் குட்டி
வா என்று அழைக்கும் குட்டி
வம்புக்காரக் குட்டி
காதை மடக்கும் குட்டி
காததூரம் போகும் குட்டி
பெண்னை நாடும் குட்டி
பெருமைக்காரக் குட்டி
நட்பை நாடும் குட்டி
நன்றியுள்ள குட்டி
அழகாய் குளிக்கும் குட்டி -உடன்
அழுக்காகும் குட்டி
வாசலில் படுக்கும் குட்டி
வந்தவரை விரட்டும் குட்டி
கால் நடை போகும் குட்டி
காலைக் கடனை முடிக்கும் குட்டி
மழலைகளைக் கொஞ்சும் குட்டி
மழுப்பி அலையும் குட்டி
துணியைத் தின்னும் குட்டி
துணிச்சலானக் குட்டி
நாலு காலுக் குட்டி
நாக்கை நீட்டும் குட்டி
மதி நிறைந்த குட்டி
மடியில் படுக்கும் குட்டி
தேங்காய் தின்னும் குட்டி
தேவலோகக் குட்டி
எலும்பைத் தின்னும் குட்டி -அவனே
என்னுயிர் பட்டி பட்டி................
No comments:
Post a Comment