தன்னலம் கருதா,
தனக்கென வாழா,
தன்மானத் தலைவரே!!
விருதுநகர் பட்டிலே,
அன்னை சிவகாமி அம்மையாருக்கும்,
குமாரசாமி அவருக்கும் பிறந்த
மாபெரும் ஜோதியே!!
காந்தியின் வழி வந்த கர்மவீரரே!
தீரர் சத்தியமூர்த்தி அவர்களின் சீடரே!
உலகத் தலைவர்கள் வியந்து
பாராட்டிய பாரதத் தலைவரே!
உனது புகழை;
உனது தியாகத்தைச் சொல்ல
எனக்குத் தகுதி ஏது??
இந்திய நாட்டில் தமிழ் நாடு
தந்த தவப்புதல்வனே !
இந்திய நாட்டின் விடுதலைக்காகச்
சிறை சென்று சித்திரவதையடைந்து
சுதந்திரம் பெற்றுத் தந்த
பெரும் தியாகியே! - ஏழைப் பங்காளனே!
கல்விக்கு வித்திட்ட கர்மவீரர் காமராஜரே!
தமிழ் நாட்டின் முதலைமச்சராக பொறுப்பேற்று
பல அரிய சாதனை செய்து
புகழ் பெற்றவரே!
கல்விக்கே கண் திறந்த கருணைக் கடலே!.
ஏழை மாணவர்களுக்கே
முதன் முதலாய் மதிய உணவு தந்த
மாபெரும் தலைவரே!
குலக் கல்வித் திட்டத்தை
ஒழித்த கோமகனே!
பட்டி தொட்டி வாழ்ந்த
பாமரமக்களுக்கும், ஏழை விவசாயிகளுக்கும்
ஏழைப்பங்காளனாய் வாழ்ந்த ஏகலைவனே!
உனது ஆட்சியில்
யாரும் செய்யாததையும், இனி
யாரும் செய்ய முடியாததையும்
செய்து காண்பித்த செம்மலே!
கறை படியாத காரூண்ணியரே!
பதவி வெறிபிடித்து அலையும்
தலைவர்களைப் போலில்லாமல்;
பதவியே வேண்டாமென தூக்கி எறிந்தவரே!
உனது தியாகத்தை என்னவென்று சொல்வேன்!
சொல்லின் செல்வமே!
பண வெறிபிடித்து அலையும் பித்தர்கள் மத்தியில்
பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசை
மூவையும் வெறுத்த முத்தமிழே.....
உனது நாமம் என்றும் வாழ்க!! வாழ்க!!
------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment