

நேரு எங்கள் நேரு
நெஞ்சில் நிறை நேரு
ஊரும் உலகம் போற்றும்
ஒப்பில்லா நேரு
குழந்தைகள் மனதிலே

கொஞ்சும் மழலைகளின் உள்ளத்தில்
கோபுரமாய் வாழ்ந்த நேரு
அழகிய மலர்ந்த ரோஜாவைத்
தன் சட்டையிலே அணிந்த நேரு

அன்பு பரிவு இரக்கமதை
அனைவரிடமும் காட்டிய நேரு
புத்தரின் கொள்கையைப்
பின்பற்றி வாழ்ந்த நேரு
மகான்களின் மனதிலும்
மனித நேயமாய் வாழ்ந்த நேரு

கள்ளம் கபடமற்ற
கருணை உள்ளம் கொண்ட நேரு
விடுதலைக்காகப் பாடுபட்ட
வீரராஜா நேரு
சிறையிலிருந்த போதும்
சிந்தனைச் சிற்பியாய் நின்ற நேரு

பாலகரிடமும் பரப்பிய நேரு
பாசமுள்ள நெஞ்சினில்
பாரியாய் வாழ்ந்த நேரு
கவிஞர்களின் நெஞ்சினில்
காவியமாய் வாழ்ந்த நேரு

அக்காவியத்தின் பிறந்த நாள்
நவம்பர் 14 - அதுவே
நேருவின் நெஞ்சில் நிறைந்த
நிகரில்லா குழந்தைகள் தினம்
A small mistake in second line i hope...
ReplyDelete:)
no it's not a mistake . it's a poetrical phrase, so 'nirai' means 'niraintha'
ReplyDeletevery good entertainment , my kid likes u a lot .... I was about to meet u during open day unfortunately , I dint find time , hats of to u mam.... doing wonderful job... very encouraging... till last year Inaya's tough sub is Tamil but now a good remarkable change , I want to thank u for making her understand easily...
ReplyDeletekeep going on.......
OK understood teacher.. :)
ReplyDelete