விழாவின்
நோக்கம்:
v மொழித்திறன்களின் பயன்பாட்டை அறிதல்.
v மொழித்திறன்கள் மாநிலத்திற்கு மாநிலம்
வேறுபடுதலை அறிதல்.
v நம் தாய்மொழியை பிற மாநிலத்தில் பயன்படுத்தும்
உத்திகள்.
v மொழிக்கு ஆற்றும் பணிகள்
v பிழையின்றி பேச எழுத முன்னேற்பாடான
நடவடிக்கைகள்.
v பிற நாட்டறிஞர்கள், எவ்வாறு மொழிக்கூறுகளையும்
திறன்களையும் கற்றல் கற்பித்தலில் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிதல்.
நிகழ்வு:
உலகத் தமிழ்ப்
பண்பாட்டு இயக்கம் சார்பில், 13 ஆவது உலகத் தமிழ் மாநாடு 16.06.2018 சனிக்கிழமை
அன்று காலை ஒன்பது மணி முதல் இரவு ஒன்பது மணி வரை பெங்களூரில் உள்ள திருவள்ளுவர்
அரங்கத்தில், பல்வேறு தலைப்பின் கீழ், ஆய்வரங்கம், கருத்தரங்கம் நடைப்பெற்றது.
இதில், ஆய்வரங்கத்தில், நால்வகைத் திறன்களும் கற்பித்தல் உத்திகளும் என்ற
தலைப்பில் உரையாடினேன்.
ஆய்வரங்கத்தின்
மூலம் நான் வெளிப்படுத்திய கருத்துகள்,
நால்வகைத் திறன்களான, கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் திறனை நிலை வாரியாக, வளர்க்கும் கற்றல் – கற்பித்தல்
உத்திகளை எடுத்து மொழிந்தேன். இதன் சார்பாக, ஆய்வுக்கட்டுரைக்கான, ஆய்வறிக்கையும்
சம்ர்ப்பித்தேன்.
இறுதியாக, உலகத்
தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் பண்பாட்டு மலர் வெளியிட்டு, பரிசும்,
மலரும் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment