Search This Blog

Monday, October 1, 2018

ஆசிரியரைப் போற்றுதும்...



விடியலே விடியலே
வித்திடும் வினைகளே
புதையலே புதையலே
புண்ணியத் தளங்களே - நீவீர்
வானத்தின் விண்மீன்கள்
வழிகாட்டும் கலைமான்கள்
என்றென்றும் எம் நெஞ்சில்
ஏழாவது அதிசயங்கள்
நீர் வாழ்க! உம் குலம் வாழ்க(2)
மலர்களே மலர்களே
மகத்துவக் குலங்களே
கிளைகளே கிளைகளே
கீதையின் மொழிகளே - நீவீர்
துள்ளி வரும் அருவிகள்
தொலை நோக்கின் உச்சங்கள்
பின்புலப் பயணத்தில்
பிள்ளையின் பிராட்டிகள்
நீர் வாழ்க! உம் குலம் வாழ்க!!
நாதமே நாதமே
நான்முகன் வேதமே
தேடலே தேடலே
தேன்தமிழ்ப் பாசுரமே - நீவீர்
இமயத்தின் விளிம்புகள்
இறைவியின் விந்தைகள்
நல்லதோர் வீணையில்
நாமகளின் நரம்புகள்
நீர் வாழ்க! உம் குலம் வாழ்க!!
திரவியமே திரவியமே
தெவிட்டா கனியமுதே
நறுமுகையே நறுமுகையே
நட்டுவாங்க நடனமே - நீவீர்
கன்னலின் களஞ்சியங்கள்
கமுகு மரக்கிளைகள்
புறநானூற்றின் பக்கத்தில்
புனித தெரேசாக்கள்
நீர் வாழ்க! உம் குலம் வாழ்க!!
விருட்சமே விருட்சமே
வெண்ணிலவு  முகில் விளக்கே..
பல்மானே பல்மானே
பாரியின் பரிதிகள் - நீவீர்
செப்பனிடும் சிற்பிகள்
சேகுவாரா புரட்சிகள்
பாரதத்தின் மாண்பை
பறைசாற்றும் புத்தர்கள்
நீர் வாழ்க! உம் குலம் வாழ்க!
போற்றுதும் போற்றுதும்
ஆசிரியரைப் போற்றுதும்
போற்றுதும் போற்றுதும்
அகிலமெங்கும் போற்றுதும்......

No comments:

Post a Comment

Translate