Search This Blog

Monday, October 1, 2018

உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம். இலங்கை. கலை இலக்கியப் பண்பாட்டுப் பெருவிழா இடம்: வீரசிங்கம் மண்ட



உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம். இலங்கை.
கலை இலக்கியப் பண்பாட்டுப் பெருவிழா
இடம்: வீரசிங்கம் மண்டபம் யாழ்ப்பாணம்.


சுற்றுலாவின் நோக்கம்:
உலகளாவிய, தமிழ்ப் பண்பாட்டைப் பற்றி அறிதல், செயல்படுத்துதல்.
நிகழ்வுகள்:
உலகத் தமிழ்ப்பண்பாட்டுக் கழகம் சார்பில் யாழ்ப்பாணத்தில் நடந்த கலை இலக்கியப் பண்பாட்டுப் பெருவிழாவிற்கு, ஆய்வரங்கத்தில் பேச அழைக்கப்பட்டிருந்தேன். இவ்விழா, 27.01.18 அன்று, வீரசிங்கம் மண்டபத்தில் நடைப்பெற்றது. இவ்விழாவின் முதல் நாளன்று, நம் பண்பாட்டைப் பறை சாற்றும் பண்பாட்டு ஊர்தி பவனி புறப்பட்டது.அதன்பின், தலைமை விருந்தினராக, திரு.சி.வி. விக்னேஷ்வரன், மாண்புமிகு முதலமைச்சர், வடமாகாணம், யாழ்ப்பாணம் மற்றும் கவர்னர் ரெஜினால்டு குரே அழைக்கப்பட்டிருந்தார்.
 இவர்கள் தலைமையில், பண்பாட்டுக்கொடி, மங்கல விளக்கு ஏற்றி இவ்விழா தொடங்கப்பெற்றது. இதன்பின், முதல்வர், கவர்னர் இவர்களின் உரைகள் தொடங்கியது. அதன்பின், சர்வமதப் பெரியோர்களின் ஆசியுரைக்குப்பின்,ஆய்வரங்கம்,கருத்தரங்கம்,கவியரங்கம்,பட்டிமன்ற நிகழ்ச்சிகள் போன்றன நடைப்பெற்றன. இதில், நான் ஆய்வரங்கத் தலைப்பில், ‘அடிப்படைக் கற்றல் கற்பித்தல் ஓர் பார்வை’ என்ற தலைப்பில் பேசினேன்.

இதில்,மொழிக்கூறுகளை எவ்வாறு கற்பிக்கலாம், கற்றல்,கற்பித்தலுக்கான உத்திகள் முதலிய கூறுகளைக் கொண்டு கல்வியினை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று,  சின்மயா வித்யாலயா, விருகம்பாக்கம்,சென்னை 92. பள்ளியின் சார்பாகப் பேசினேன்.
அதன்பின் மறுநாள், 28.01.18 அன்று பாரதிவிழா நடைப்பெற்றது. இதில், பார்வையாளராகப் பங்கேற்று செய்திச் சிந்தனையைப் பெற்றேன்

மூன்றாவது நாள், 29.01.2018 அன்று முல்லைத் தீவு மாவட்டம்,வடக்கு மாகாணம் வவுனியா,போராளிகளின் மறுவாழ்வு மையம் புதுக்குடியிருப்புக்குச் சென்றோம். அங்கு, போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உலகப் பண்பாட்டு மையம் சார்பாக, நிதி உதவிகள் வழங்கப்பட்டது.. நம் பள்ளி சார்பாக சிறு நன்கொடை உதவியும் செய்தேன்

நான்காவது நாள், யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு, கொழும்பு (COLOMBO) சென்றோம். அங்கு, முனைவர் சதிஷ்குமார், M.A,M.PHIL,D.LIT,(USA)JP அகில தமிழ்க் கல்வி பொறுப்பாளர்,உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், அவர்கள், நாங்கள் பள்ளியின் சார்பாக வந்திருப்பதை அறிந்து, எங்களுக்கு அவரின் விருந்தினரின் மாளிகையில் அடைக்கலம் தந்து, ஒரு சில நற்செயல்களைச் செய்தார்

எ.கா. 30.01.18 அன்று, நாங்கள் இங்கு இருக்கும் பள்ளிகளில் கற்பித்தல் உத்திகள் கட்டமைப்புகளைப் பார்வையிட வேண்டும் என்று கேட்டதன் பேரில் The Royal College, Colombo என்ற
        கொழும்பின் அரசுப்பள்ளிக்கு அழைத்துச் சென்றார்


 அங்கிருக்கும் ஆசிரியருடன் உரையாடினோம். மாணவர்களைச் சந்தித்தோம்.. அதில், குறிப்பிடத்தக்கது, அவர்களின் பாட அமைப்பு முறை, கற்பித்தல் உத்திகள், கட்டமைப்பு வசதிகள், வெளியரங்கு பயிலகம், மாணவர்கள் தன்னிச்சையாகக் கற்கும் சூழல், புதுமை, கற்பனை வளம், இயற்கைக்கு முக்கியத்துவம், நெகிழி இல்லா பயன்பாடு இப்படிப் பல செய்திகள் என்னை ஈர்த்தது.











 பின்பு, அங்கிருந்து, புத்தமடத்திற்குச் சென்று, அங்குள்ள, முக்கிய வரலாற்றுத் தலங்களைப் பார்வையிட்டபின் அங்கிருந்து,புறப்பட்டு சென்னை வந்தோம்.
இப்பண்பாட்டுச் சுற்றுலாமூலம்  கிடைத்த பயன்:
Ø  ஒரு நாட்டின் நாகரிகம்,பண்பாட்டை அறிய முடிந்தது.
Ø  தமிழை வளர்க்க, செழுமைப்படுத்த நாம் செய்ய வேண்டிய அடுத்த கட்ட செயல்கள் என்னவென திட்டமிட வழிகோலியது.
Ø  ஒரு  நாட்டின் வளர்ச்சி, கல்வியை நோக்கியே அமைந்துள்ளது என்பதையும் பெற முடிந்தது.

No comments:

Post a Comment

Translate