வானவில்லை வளைக்க
வளைகரம் துணிந்தது.
வஞ்சியின் வாஞ்சையில்
அது சாத்தியமென்றது..
காதலனை கனிய வைக்க
வளைகரமும் வாஞ்சையும்
ஏன் சாத்தி யமற்றதாகி விடுகிறது.
ஏனடி மனமே!
நீயே! கூறடி பதில் என்றேன்.
அவன் மதியிழந்தவனல்ல..
மங்கை உன்பால் விழுந்தவன்..
வானவில்லென்றி
வைரமுடை மனமாக
உன்னுள் உயிரோவியமாய் இருக்கும்போது சாத்தியமற்றதுதானடி
என்னுயிர் தோழி!!🤔
No comments:
Post a Comment