தினம் தினம்
மனம் தினம்
மாயை ஒன்றின்மேல்
மையல் கொள்கிறது...
செவ்வரளியைச்
சுற்றியே ஒரு சிறு வண்டு...
சில்லாய்ப்பு செய்கிறது
சினுங்குகிறது..
செயலிழக்குகிறது
செந்தாமரையாக்குகிறது..
சிறகை விரித்து அமருகிறது..
சிலையாய் செவ்வரளி
செய்வதறியாது
செவ்வண்டிடம்
செல்லியே செயலிழக்கும்
உன் மனதுக்கு
மாற்று மருந்து நானென்றால்
மானாகத் துள்ளியெழுகிறேன்
மயக்கியவன் நானென்றால் மாலையிடுகிறேன்
மாற்றான் தோட்டத்துச் செவ்வரளி
மாறி அமர்ந்து விட்டாய்
மார்பில் மரணித்து விட்டாய்..
மகரந்தத்தைப் பெற்று விட்டாய்..
மறுபடியும் மனதோடு கூட மணித்துளிகள் போதும்...
மாயவலையின் விழியில் நீ
விழாமல் விருத்தம் கொள்ளவே..
சிலையாய் செவ்வண்டாய்
செயலிழந்து அன்றி
சிந்திக்கிறேன்
செவ்வண்டைச்
செங்கமலம் சேர்க்க...
பொறுத்திரு பொறுமையாய்
என் மார்பில் பொய்த்திரு...
போதுமென்ற மனம் கொள்
போவோம் மன ஊர்வலம் தினம் நாமாக....
No comments:
Post a Comment