Search This Blog

Monday, October 1, 2018

முதலாம் உலகத் தமிழ் குழந்தைகள் இலக்கிய மாநாடு – 2018 (1 st INTERNATIONAL CONFE




முதலாம் உலகத் தமிழ் குழந்தைகள் இலக்கிய மாநாடு – 2018
(1 st INTERNATIONAL CONFERENCE OF CHILDREN’S LITERATURE IN TAMIL -2018)

இப்பயணத்தின் நோக்கம்:
v  கற்றல் கற்பித்தலின் உத்திகள் அறிதல்.
v  குழந்தை இலக்கியம் அறிதல்.
v  குழந்தைகளுக்கான, கல்வி முறைகள் அறிதல்.
v  தமிழ்மொழி உலகளாவிய அளவில் பெறுமிடம் அறிதல்.
பயன்:
Ø  தமிழ்மொழியை கற்றுக் கொள்ளும் பல்வேறு உத்திகளை அறிந்து கொள்ளுதல்.
Ø  அறிஞர்களின் சொற்பொழிவுகள், தமிழின் பயன்பாட்டைப் பயன்படுத்திய உத்தியை அறிதல்.
Ø  இலக்கியம் சார்ந்த பல்வேறு கட்டுரைகள் அறிதல்.
Ø  உலகளாவிய உறவு முறைகள் கொண்ட உறவு பலப்படுதல்.

முதலாம் உலகத் தமிழ் குழந்தைகள் இலக்கிய மாநாடு – 2018, மலாயா பல்கலைக் கழகம், கோலாலம்பூர், மலேசியாவில் 08.06.2018 முதல் 10.06.2018 வரை நடைப்பெற்றது. இம்மாநாட்டின் கருப்பொருள், புத்துலக வளர்ச்சிகேற்பத் தரமான குழந்தை இலக்கிய வளர்ச்சியை நோக்கி ... என்ற தலைப்பில், மாநாட்டு நிகழ்வுகளும் அமர்வுகளும் நடைப்பெற்றன. ஜூன் 8 ஆம் தேதி தொடங்கி ஜூன் 10 ஆம் தேதி  நிறைவு பெற்றது. ஒவ்வொரு நாளும் காலை ஒன்பது மணி முதல் தொடங்கிய இந்த அமர்வுகள் இரவு ஒன்பது மணிக்கு நிறைவடைந்தன. ஜூன் 8, திறப்பு விழா மற்றும் அமர்வுகள். ஜூன் 9 அமர்வுகள். ஜூன் 10, அமர்வுகள் மற்றும் நிறைவு விழா.
ஜூன் ஒன்பது, முதல் அமர்வில் நான், கற்றல் கற்பித்தலில் கதை, கட்டுரை, நாடகம் – ஒரு பார்வை என்ற தலைப்பில் ஆய்வறிக்கை சமர்ப்பித்து, சொற்பொழிவாற்றினேன். அதனைத் தொடந்து, பல்வேறு அமர்வுகளில், பங்கேற்று, கருத்துகளை உள்வாங்கினேன். நிறைவு நாள் அன்று மலேசியா, மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. குணசேகரன் பங்கேற்று, விழாவை நிறைவு செய்தார்.






 







கற்றல் கற்பித்தலில் கதை, கட்டுரை, நாடகம் – ஒரு பார்வை என்ற தலைப்பில் ஆய்வறிக்கை சமர்ப்பித்து, சொற்பொழிவாற்றினேன். அதனைத் தொடந்து, பல்வேறு அமர்வுகளில், பங்கேற்று, கருத்துகளை உள்வாங்கினேன். நிறைவு நாள் அன்று மலேசியா, மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. குணசேகரன் பங்கேற்று, விழாவை நிறைவு செய்தார்.




தொகுப்பு
சித்ரகலா கலைச்செல்வன்

No comments:

Post a Comment

Translate