என்னவன் என்கிறேன்
எப்பொழுதும் ஏங்குகிறேன்
முகவுரை என்கிறேன்
முப்பொழுதும் முயல்கிறேன்
வானவன் என்கிறேன்
வானளாவ வருடுகிறேன்
கண்ணனவன் என்கிறேன்
கவிதையாய் நிறுத்துகிறேன்..
எத்துனையாயினும்
ஏன் இந்த தவிப்பு
நேரத்தின் கணிப்பு
கரை சேர ஏன் மறுப்பு?
காரணமே நீ அறிந்தால்
காரண வலியை உரைப்பாயா? ??
உரைப்பதற்கு உனக்கும்
உற்றுழி உதவியும்
உறுபொருள் கொடுத்தும்
என் ஆசானாக வணங்க வேண்டுமா?
ஆசையோடு ஆமோதிக்கிறேன்?
ஆன்ற பொருளை அறிந்து வா!
காரணமே!! என் காரிருளே!!!
No comments:
Post a Comment