மறதி
நாம் கற்றுக்கொண்டதை அல்லது பெற்ற அனுபவத்தை தேவைப்படும் போது மீண்டும் நினைவு கூற இயலவில்லையென்றால் அதனை மறதி அல்லது மறத்தல் என்று கூறுவர்.
மறத்தலின் காரணிகள்
மறத்தல் என்பது இரு காரணிகளைக்(factors) கொண்டது. அவை,
- நாம் கற்கும்போது கற்ற பொருள் நம் மனதில் எவ்விதம் பதிந்துள்ளது.
- கற்றனவற்றை அழிக்கக்கூடிய காரணிகளின் வலிமை எத்தகையது என்பதைப் பொறுத்தது.
மறத்தலின் காரணங்கள்
- கற்றனவற்றை நாம் நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் இருப்பது.
- நினைவு கொண்டுவருவதற்கு ஏற்ற சரியான தூண்டல்களை(stimuli) நாம் ஏற்படுத்தாதது.
- பின்னோக்கத் தடை, முன்னோக்கத்தடையின் தீவிர மனவெழுச்சி
பின்னோக்கத்தடை(retroactive) - புதிதாய் கற்ற பாடப்பொருள் அதற்கு முன் கற்றவற்றைப் பாதிப்பதும்.
முன்னோக்க்கத்தடை(proactive) - முன்பு கற்றவை, அடுத்துக் கற்பனவற்றை மனத்திருத்தலில் குறுக்கிட்டு அவற்றை மறக்குமாறு செய்யும்.
- அச்சம், சினம் போன்ற தீவிர மனவெழுச்சிகள்(emotions) மற்றும் தன்னுணர்வு மிகுந்து காணப்படுதல்.
- கற்றவற்றில் அக்கறையும், ஆர்வமும் குறைதல்.
- தன் மானத்தை குறைக்கக் கூடிய நிகழ்ச்சிகளும் குற்ற உணர்ச்சியை கொடுக்கக் கூடிய நிகழ்ச்சிகளும் நம் மனத்தில் ஒடுக்கப்படுதல்.
- வயது முதிர்ச்சியின் விளைவாக நரம்புத் தொகுதியில் எழும் உடலியல் மாற்றம்.
- மறதி நோய் என்று கூறப்படும் 'உளவுப்பிறழ்வு'(psychological problem).
மறத்தல் முழுமையாகத் தீமை கொடுக்கக்கூடியது அன்று பயனற்ற பலவற்றை மறப்பது, புதியவற்றைக் கற்க நமக்கு உதவும். நமக்கு துன்பத்தைத் தரும் அனுபவங்களை மறத்தல் நன்றேயாகும்.............
No comments:
Post a Comment