தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூபம் கமழ, துயிலணை மேல் கண் வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்!
மாமீர்! அவளை எழுப்பீரோ! உன் மகள் தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன், மாதவன், வைகுந்தன், என்றென்று
நாமம் பலவும் நவின்று ஏலோரெம்பாவாய்!
விளக்கம்:
"மாசற்ற வைரங்கள் பொறுத்தப்பட்ட மாளிகையில் நான்கு புறமும் தீபங்கள் எரிய, நறுமணப்புகை எங்கும் வீச, மென்மையான படுக்கையில் துயிலுரும் மாமன் மகளே! மணிகள் பதித்த கதவினை திறப்பாயாக! மாமிமாரே! துயிலுரும் உங்கள் மகளை எழுப்ப மாட்டீர்களோ? தங்கள் மகள் ஊமையோ அல்லது செவிடோ? சோம்பிப் பெருந்தூக்கம் உடையவளோ? அல்லது, எழுந்திராதபடி காவலில் வைக்கப்படுள்ளாளோ? ஏதேனும் மந்திரத்தால் கட்டப்பட்டுள்ளாளோ? இப்பெண்ணை எழுப்புவதற்கு 'வியக்கத்தக்க விசேஷ குணங்களை உடையவனே, வைகுண்டத்தில் வாழ்பவனே, மஹாலக்ஷ்மியின் நாயகனே' என எம்பெருமானின் ஆயிரம் நாமங்களை சொல்வோம்."
No comments:
Post a Comment