பறவைகளின் கீசு, கீசு ஒலி மற்றும், தயிற்கடையும் ஓசையும், நாங்கள் பாடுபவதும் கேட்டும் இன்னும் படுத்துரங்கலாகுமோ?
கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாசநறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப்படுத்த தயிர்அரவம் கேட்டிலையோ!
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ!
தேசமுடையாய்! திறவேலோரெம்பாவாய்.
விளக்கம்:
"கீசு கீசு என்று, ஆனைச்சாத்தன் பறவைகள் எழுப்பும் பேரொலி உனக்கு கேட்கவில்லையா, பேதைப்பெண்ணே! வாசனை வீசும் கூந்தலையுடைய இடைச்சிமார்கள், தங்கள் தாலிகள் தள தள என்று ஒலிக்க, மத்தினால் கைகளை மாற்றி மாற்றி தயிர் கடையும் சப்தத்தை கேட்டிலையோ? நம் பெண்கள் கூட்டத்துக்கு தலைமையானவளே! நாராயணனின் திரு அவதாரமான (கேசவன் என்னும்) கண்ணன் திருப்புகழை நாங்கள் பாடிக்கொண்டிருக்க, நீ இன்னும் படுத்துறங்கலாகுமோ? முகத்தில் பிரகாசம் ஜொலிக்கும் பெண்ணே! எழுந்து கதவைத்திற!
No comments:
Post a Comment