Search This Blog

Thursday, December 16, 2010

மார்கழி-2 பாடல்+பொருள்


நோன்பு நோற்க விரும்புவோர், முக்கியமாக மேற்கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய விதி முறைகள்:



பாடல்:

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம், பாலுண்ணோம், நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம், மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதனச் செய்யோம், தீக்குறளை சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோரரெம்பாவாய்!

பொருள்:
"இப்பூமியில் வாழ்பவர்களே, திருப்பாற்கடலுள் அரிதுயில் செய்கின்ற பரமனின் திருவடிகளை அன்புடன்பாடி, நெய் உண்ணாது, பால் பருகாது, விடியற்காலை நீராடி, கண்களுக்கு மை இடாமல், தலையில் பூ சூடாமல், செய்யக்கூடாதவற்றைச்செய்யாமல், பொய் பேசாது, பெரியோர்களுக்கும், ஏழைகளுக்கும் தம்மால் இயன்ற அளவு வழங்கி, நாம் உய்யும் வகையை நாடி, மகிழ்ந்து, நாமும் நம் நோன்புக்கு மேற்கொள்ளும் செயல்களைக்கேளீர்!"




No comments:

Post a Comment

Translate