Search This Blog

Thursday, December 23, 2010

மார்கழி- 8 பாடல் + விளக்கம்

கண்ணனிடமிருந்து நாம் விரும்புவதை அடையும் வழி:


கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போக்கின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோதுகலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப்பறைகொண்டு
 மாவாய் பிளநதானை மல்லரைமாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்றாராய்ந் தருளேலோரெம்பாவாய்!


விளக்கம்:


              "பெருமகிழ்ச்சியுடன் விளங்கும் பெண்ணே! கீழ்த்திசையில் வானம் வெளுத்துள்ளது. எருமைகள் பனி படர்ந்த புல்வேலிகளில் மேய்வதைப்பார்! பாவை நோன்புக்கு கிளம்பிய மற்ற பெண்களை தடுத்து நிறுத்தி, உன்னையும் அழைத்துச்செல்ல உன் வாசலில் வந்து நின்றோம். இனியும் உறங்காது எழுவாய்! குதிரை வடிவு கொண்ட கேசி என்னும் அரக்கனின் வாயைப்பிளந்தவனும், கம்சனால் ஏவப்பட்ட (சாணூரன், முஷ்டிகன் என்னும்) மல்லர்களை மாளச்செய்தவனும், தேவாதி தேவர்களுக்கெனல்லாம் தலைவனான கண்ணனின் மகிமையைப்பாடி, அவனை நாம் வணங்கினால், நம் குறைகளை மன்னித்து, அருள் புரிவான். எனவே எழுந்திராய்!"

No comments:

Post a Comment

Translate