தமிழ்ப் புத்தாண்டு போலவே ஆங்கிலப் புத்தாண்டுக்கும் ஆரம்பத்தில் குழப்பம் இருந்தது. சித்திரை 1ஆம் தேதியை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி வந்த தமிழர்களுக்கு, தை 1ஆம் தேதியை புத்தாண்டாகக் கொண்டாடுவதில் உள்ள குழப்பமான மனநிலை அன்றைய மேற்கத்தைய மக்களுக்கும் இருந்தது.
முட்டாள்கள் தினம் என்று நாம் ஏகபோகமாகக் கொண்டாடிவரும் ஏப்ரல் 1ஆம் தேதிதான் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் துவக்கம்.
16ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பா கண்டத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை கொண்டாட்டமாக இருக்கும். இதில் எட்டாம் நாளான ஏப்ரல் 1ஆம் தேதி வருடப் பிறப்பாகக் கருதப்பட்டு, புத்தாண்டுக் கொண்டாடப்பட்டது. அதுவரை உலகின் நடைமுறையில் இருந்ததை ‘ஜூலியன் ஆண்டு’ என்கிறார்கள்.
அப்போது போப் ஆண்டவராக இருந்த கிரோகோரி ஏப்ரல் 1-யை மாற்றி ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டு தினமாக அறிவித்தார். அதுதான் அவரது பெயரையும் சேர்த்து அழைக்கப்படும் ‘கிரோகிரியன் காலண்டர்’ ஆனது.
அதுவரை ஏப்ரல் 1-யை புத்தாண்டாகக் கொண்டாடி வந்த மக்கள், ஜனவரி 1-யை புத்தாண்டாகக் கொண்டாட தடுமாறினர். நிறைய குழப்பங்கள் நேர்ந்தன. பல்வேறு தடுமாற்றங்களுக்குப் பின்னர். புத்தாண்டை ஒவ்வொரு நாடாக அங்கீகரித்தன.
ஸ்காட்லாந்து 1660-லும், ஜெர்மனி, டென்மார்க், நார்வே ஆகிய நாடுகள் 1700-லும், இங்கிலாந்து 1752-லும், பிரான்ஸ் 1852-லும் ஜனவரி 1-யை புத்தாண்டு தினமாக அங்கீகரித்தன. ஆனால் மக்கள் லேசுபட்டவர்களா என்ன? அரசாங்கம் சொல்லியும் கேட்காமல், ஏப்ரல் 1-யையே புத்தாண்டாகக் கொண்டாடி வந்தனர். பார்த்தன அரசாங்கங்கள். மக்களை திசை திருப்ப (ஜனவரி 1 பக்கம்), ஏப்ரல் 1ஆம் தேதியை முட்டாள்கள் தினமாக அறிவித்தன எனக் கூறப்படுகிறது.
அதுமுதல் மக்கள் ஜனவரி 1ஆம் தேதியை புத்தாண்டு தினமாகவும், ஏப்ரல் 1ஆம் தேதியை முட்டாள்கள் தினமாகவும் கொண்டாடி வருகின்றனர்.
இதுதாங்க புத்தாண்டு பிறந்த கதை. இது ஏதோ ஏப்ரல் 1ஆம் தேதி அன்று வரவேண்டிய செய்தி என்று நினைத்து விடாதீர்கள்.
No comments:
Post a Comment