Search This Blog

Saturday, December 4, 2010

சைவமும் வைணவமும்!



       இந்துமத அடிப்படை உண்மைகளும் கொள்கைகளும் ஆரியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னரே இங்கிருந்த மக்களிடையே தோன்றி வளர்ந்தது. சிந்து சமவெளி நாகரீகம் ஆங்கிலேயர்கள் கண்டுபிடிக்கும் முன்னர், ஆரியர்களின் சமஸ்கிருத வேதங்களும் கடவுள் களுந்தான் இந்தியாவின் தொன்மை வாய்ந்தவை என கற்பிக்கப்பட்டு வந்தன. ஆங்கில அறிஞர் சர் ஜான் மார்ஷல் முயற்சியால் சிந்து சம வெளி நாகரீகம் அகழ்வாராய்ச்சி செய்யப்பட் டது. சிந்து சமவெளி மக்கள் திராவிடர்கள் என்றும், இவர்களது மொழி பழந்தமிழ் எனவும் உறுதிப்படுத்தப்பட்டன. ஹரப்பா, மொகஞ்ச தாரோவில் தோண்டி எடுக்கப்பட்ட புதைப் பொருட்களின் ஆராய்ச்சியில் 5000 ஆண்டு களுக்கு முன்னரே சிவ வழிபாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிவன் யோக வடிவில் (பசுபதி எனவும் அழைக்கப்படும்) அமர்ந்துள் ளார். அவரைச் சுற்றியும் பசுக்கள் மற்றும் விலங்குகள் சுற்றி நிற்பது போன்ற முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டன. இதன்மூலம் சிவன் வழிபாடு வரலாற்றுக்கு முற்பட்டதென்பது தெளிவாகத் தெரிகிறது.


    சிந்து சமவெளி முத்திரைகளையும் புதைப் பொருட்களையும் நன்கு ஆராய்ந்து முதன்மை அறிக்கையை வெளியிட்ட சர் ஜான் மார்ஷல் தனது அறிக்கையில்,
"
மொகஞ்சதாரோ, ஹரப்பா என்பவை மறைவாக வைத்திருந்த நமக்கு வெளிப்படுத்தும் புது வெளிப்பாடுகள் பலவற்றுள் முதன்மை யாக குறிப்பிடத்தக்கது. யாதெனில், சிவ நெறியின் வரலாற்றுத் தொன்மை நெறிகளில் மிகவும் பழமை வாய்ந்தது ஆகும்.''


    இதன்மூலம் சிந்து சமவெளி மக்கள் தமிழர்கள் என்றும் தமிழர்களின் முழு முதற்கடவுள் சிவபெருமானே ஆகும். ஆரியர்கள் வருகையால் சிந்து சமவெளி நாக ரீகம் அழிக்கப்பட்டது. அம்மக்கள் தென்னிந்தி யாவை நோக்கி வந்தனர். இதனால் இந்தியா வின் பூர்வீக மக்கள் திராவிடர் என்றும், மத்திய ஆசியப் பகுதியிலிருந்து வந்தவர்கள் ஆரியர்கள் என இரண்டு இனங்களாகின. தமிழ்நாட்டை பொறுத்தவரை தமிழ்- ஆரிய நாகரீகம் பண்பாடுகளின் கலப்பே இன்றைய இந்துமதமாகும். அதில் பிரதானமானது சைவமும் வைணவமும்.

         சிவபெருமானை முழுமுதல் தெய்வமாக வணங்கியவர்கள் நாயன்மார்கள் எனப்பட்ட னர். அவர்களுள் திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞான சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் மிக முக்கிய மானவர்கள். இவர்கள் சிவனை தரிசித்து சிவ தலங்கள் தோறும் சென்று தேவாரம் பாடினார்கள். கிராமங்களில் வாழ்ந்த அனைத் துப் பிரிவு மக்களுக்கிடையே சிவநெறியை பரப்பினர். இவர்களது முயற்சியால் சைவ சமயம் வளர்ச்சியடைந்தது. நாயன்மார்கள் அருளிய பாடல்கள் அனைத்தையும் நம்பியாண்டார் நம்பி தொகுத்தார். இத்தொகுப்பு சைவத் திருமுறைகள் என அழைக்கப்படுகிறது. இதில் மொத்தம் 12 திருமுறைகள் உள்ளன.

         திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் அருளிய தேவாரம் 1, 2, 3 திருமுறைகளாகும். திருநாவுக்கர சர் அருளிய தேவாரம் 4, 5, 6 திருமுறைகள். சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்த தேவா ரம் ஏழாம் திருமுறையாகும். மாணிக்கவாசகர் வழங்கிய திருவாசகம், திருக்கோவையார் எட்டாவது திருமுறையாகும். திருமாளிகைத் தேவர் முதலிய ஒன்பது பேர்கள் அருளிச் செய்த திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஒன்பதாம் திருமுறையாகும். திருமூலதேவ நாயனார் அருளிச் செய்த திருமந்திரம் பத்தாம் திருமுறையாகும். திருவாலவாயுடையார், காரைக்கால் அம்மையார் முதலிய பன்னிருவர் அருளியவை பதினோராம் திருமுறையாகும். சேக்கிழார் வழங்கிய திருத்தொண்டர் புராணம் பன்னிரண் டாம் திருமுறையாகும். இவை மட்டுமல்லாது 14 சைவ சிந்தாந்த சாத்திரங்கள், சித்தர் பாடல் கள் என அனைத்தும் சைவ இலக்கியங்கள் ஆகும்.
    
இதனால் சைவ சமயம் ஆகம விதிகளின்படி, பன்னிரு திருமறைகளுடன் வாழ்த்து தமிழக மெங்கும் சிவாலயங்களில் பாடப்பட்டு வருகின்றன.

         திருமாலை முழுமுதல் கடவுளாக வணங்கியவர்கள் வைணவர் எனப்பட்டனர். வைணவத் துறவிகளுக்கு ஆழ்வார்கள் என்று பெயர். இவர்கள் பன்னிரண்டு பேர். பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், மதுரகவி யாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருப் பாணழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசை யாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், நம்மாழ்வார், குலசேகர ஆழ்வார் ஆகியோர் ஆவர். இந்த பன்னிரு ஆழ்வார்களும் பாடிய பாடல்களின் தொகுப்புக்கு நாலாயிரத்திவ்விய பிரபந்தம் என்று பெயர். நாதமுனி என்பவர் இந் நூலைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். முதலாயி ரம், பெரிய திருமொழி, இறைப்பா, திருமொழி என நான்கு பகுதிகளைக் கொண்டது. இந்நூல் இருபத்திநான்கு நூல்களால் ஆனது.

        சைவ, வைணவ சமயங்கள் சமுதாயத்தில் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தின. பல்லவர் காலத்திலிருந்து சைவமும் வைணவமும் செயல் பட்டு வந்தன. நாயன்மார்களும், ஆழ்வார்களும் இச்சமயக் கருத்துக்களை பாமர மக்களிடையே பரப்பி வந்தனர்.

         சைவமும் வைணவமும் பல்லவர் காலத்தில் வளரத் தொடங்கிச் சோழர் காலத்தில் மிக உன்னத நிலையை எட்டியிருந்தன. சோழ மன்னர் கள் வேறுபாடுகளின்றிச் சைவம், வைணவம் ஆகிய இரு சமயத்துக் கோயில்களுக்கும் மடங்களுக்கும் தானங்கள் வழங்கியுள்ளனர். இருப்பினும் தமிழ் மன்னர்கள் சைவ சமயத் தையே போற்றி வளர்த்தனர். பொதுவாக இவ்விரு சமயங்களும் நாட்டில் ஒருமைப்பாட் டுடன் இருந்தன. எனினும் அவற்றுக்கிடையே அவ்வப்போது பூசல்கள் உருவாகின.

        சைவ மதத்தை இழிவாக பேசிய வைணவ ஆச்சாரியா இராமானுஜரை தமிழகத்தை விட்டு துரத்திவிட்டனர் சைவ அடியார்கள். இதனால் இராமானுஜர் தமிழகத்தை விட்டு வேறு இடத்துக்குச் சென்று நெடுங்காலம் வாழ்ந்து வரவேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. வைணவர்களின் ஆதிக்கத்தை வீழ்த்த எண்ணி இரண்டாம் குலோத்துங்கன் தில்லைக் கோவிந்த ராசப் பெருமானை கடலில் எறிந்தான். அதே போல சைவக் கோயிலின் மகேசுரர்கள் வைணவக் கோயிலின் பட்டர்களுடன் உறவுக் கொண்டாடிய தற்காக அவர்கள் உடமைகளைக் கோயில் மகாசபை பறிமுதல் செய்தனர். இவ்வாறு சைவ சமயத்தினர் தமது சமயத்தை மன்னர் காலத்தில் நிலைநாட்டி வளர்த்து வந்தனர். ஆனால் இன்று தில்லை நடராசர் கோயிலின் திருச்சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம்- திருவாசகம் பாடி வழிபட முடியாமல் பார்ப்பணிய தீட்சதர்கள் தடுத்து வருகின்றனர். தமிழ் மொழியும் தமிழர்களும் இழிவுபடுத்தப்படு கின்றனர்.

         வைணவக் கோயில்களில் பெருமான் அருகில் அமர்ந்து நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பாடல்கள் பாராயணம் செய்யும் வழக்கமுண்டு. இது வைணவ சமயத்திற்குக் கிடைத்துள்ள உரிமையாகும். இவ்வுரிமையை இன்றளவும் சைவக் கோயில்களில் திருமுறைகள் ஓதுவதற் குப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் கடவுள் சிவன் அருகில் சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிப்பதும், தமிழர்களாகிய ஓதுவார்கள் தொலைவில் குறிப்பிட்ட இடத் துக்கப்பால் நின்று திருமுறைப் பாடல்கள் இசைப்பதும் மரபாக இருந்து வருகிறது. தமிழகத்தில் "தென்னாருடைய சிவன்' கோயி லில் தமிழிசை முழங்கும் உரிமையைச் சைவ வழிபாட்டினர் பெறவில்லையா? அல்லது பெற்றிருந்த உரிமையை இழந்துவிட்டார் களா?

         சைவமும் வைணவமும் இந்துமதத்தின் இரு பிரிவுகளானாலும் சைவமும், சைவ சித்தாந்தங்களும், சித்த வைத்திய முறைகளும் தமிழர்களுக்கே உரியது.


2 comments:

Translate