Search This Blog

Wednesday, January 19, 2011

**எனது எமரால்டு அணியின் மகத்தான வெற்றி**

அந்தி சாயும் அழகிய மாலை வேளையில்
ஆசிரியர் கூட்டம் ஓர் கூடாரத்தில் குழும
அன்ன நடை கொண்ட அழகிய நடையுடன்
நகை ததும்ப தலைமையாசிரியர் வந்தமர்ந்து
வணக்கம் கூறி உரையினைத் தொடங்க
கடல் மடை திறந்த வெள்ளம் போல்
கணக்கில்லா உத்திகளை கூறும் அச்சமயத்திலும்
அணியின் முக்கியத்துவத்தை உணர்த்தி
திறமை கொண்ட திருமகள்களை
அணித் தலைவியாக முன்மொழிய,
முன்மொழிந்த திருமகளுள் ஒருவள்
எனது பெயரை மனமுவந்து உரைக்க
அடியேன் செய்வதறியாது திகைப்புடன் நின்று !
திரும்பிப் பார்க்கும் தருணம் கூட பொருட்படுத்தாது !!
கைத்தட்டலுடன் ஆசனத்தில் அமர வைத்தனர் அடியனை....
ஐயகோ!!
இதுவென்ன கொடுமை!
இது சாத்தியமா!!
என என் வாய்க்குமுறல் பேச முடியாது பிதற்றவும்
கண் மருளும் அந்நேரத்தில்
மனமே! என் செய்குவேன் என்ற வினாவுக்கு முன்
மனம் முடியும் என்று கூறி சாந்தியடையச் செய்தது....


                                          நாட்கள் நகர்ந்தன........


நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளிலும்
அணியிடம் தோல்வி என்ற அவல நிலையே ஏற்பட்டது..
மீண்டும் என் மனம் கூறியது "தளராதே"
'முயற்சி பலனைத் தரும்' என்றும்,
'ஒரு கை ஓசை என்றும் ஒலிக்காது'
'நான், நீ என்றால் உதடுகள் ஒட்டுவதில்லை
நாம் என்ற போதுதான் உதடுகள் ஒட்டும்'
என்ற அறிஞர்களின் கூற்றுக்கிணங்க
என் அணியின் மாணவச் செல்வங்களிடம்
மார் தட்டிக் கூறினேன்,
'உம்மால் முடியுமென்று'
உமக்கு பக்க பலமாய் .......
எனதணி ஆசிரியப் பெருமக்களும்
யானும் நிற்போமென்று.....



நடந்தது அந்த அதிசயம்
அதுவும் குறுகிய ஒரு வார காலத்திற்குள்
குவித்தது!! வாரிக் கொடுத்தது!!
வெற்றி!! வெற்றி!!  என்ற
வெற்றி வேலனின் கரத்தில் உள்ள வேல் போல்
என் மனதில் ஆழமாய் வந்து குத்தியது!
ஆனால்- அது வலியல்ல!!,
அது வெற்றி என்ற சுகமான சுப்ரபாதமாக!.........
ஆம்! என் அணி வென்றது ...
முழு வெற்றிக் கனியைப் பறித்தது
பிற அணியிடமிருந்து .....



நடந்தது ஜனவரி, 12 ..
குழந்தைகளின் செல்ல மாமாவாக விளங்கிய
அவரின் பெயரைக் கொண்ட
அந்த நேரு மாமாவின் விளையாட்டுத் திடலில்
திணறினேன் வெற்றியின் களிப்பில்...
முப்பழச்சுவை கொண்ட வெற்றிக்கனியைப் பறித்த
பாசமுள்ள என் மாணவச்செல்வங்களுடன்....

விடா முயற்சி விஷ்வரூப வெற்றி....
அதுவே என் எமரால்டு அணியின் வியத்தகு வெற்றி........... 


No comments:

Post a Comment

Translate